Vijayakanth: விஜயகாந்துக்காக தளபதி 68 அப்டேட்டை நிறுத்தும் விஜய்.. நெகிழ்ச்சியில் கேப்டன் ரசிகர்கள்!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இரவோடு இரவாக அஞ்சலி செலுத்தினார் விஜய். தனது ஆரம்ப காலத்தில் செந்தூரபாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தார் விஜயகாந்த். அதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக தளபதி 68 அப்டேட்டை ஒத்தி வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி 68 அப்டேட் ஒத்தி வைப்பு?
கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், நேற்று காலை உயிரிழந்தார். இதனால் தமிழக மக்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் மறைவுக்கு ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்ஹாசன், விஜய், இளையராஜா ஆகியோர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 Vijayakanth: Thalapathy 68 Update Postponed With Respect To The Sudden Demise Of Captain Vijayakanth

தேமுதிக அலுவலகத்தில் வைத்திருந்த விஜயகாந்தின் உடலுக்கு, நேற்று இரவோடு இரவாக விஜய் அஞ்சலி செலுத்தினார். அப்போது கண் கலங்கியபடி விஜயகாந்துக்கு விஜய் அஞ்சலி செலுத்தியது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவும் விதமாக செந்தூரபாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த்.

அதேபோல் விஜயகாந்தின் வளர்ச்சியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரும் முக்கிய பங்காற்றினார். விஜயகாந்தை வைத்து அதிக படங்களை இயக்கியதும் எஸ்.ஏ சந்திரசேகர் தான். இதனால் விஜயகாந்த் - விஜய் குடும்பத்தினரிடையே நெருங்கிய நட்பு உள்ளது. வெளிநாட்டில் இருப்பதால் விஜயகாந்த் உடலுக்கு எஸ்.ஏ சந்திரசேகர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவு காரணமாக தளபதி 68 அப்டேட் வெளியிடுவது ஒத்தி வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர், விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. இதனால் தளபதி 68 அப்டேட் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தனர்.

இதனிடையே விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தளபதி 68 அப்டேட்களை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் இந்த முடிவு கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X