பீல்டுல ரஜினி, கமல்.. விஜய் நடிக்கல, அஜித் ஆர்வம் காட்டல.. 90ஸ் கிட்ஸ் மட்டும் என்ன பாவம் பண்ணாங்க!

சென்னை: சிறு வயதில் இருந்தே யாரை எல்லாம் பார்த்து, யாருடைய இசையை மெய் மறந்து வாக்மேன் வைத்து கேட்டு ரசித்து, யாருடைய காமெடி காட்சிகளுக்கு "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்றும் யாருடைய பஞ்ச் வசனங்களை "கில்லி ஆடலாம், கபடி ஆடலாம் ஏன் கதகளி கூட ஆடலாம்.. ஆனால், ஆணவத்துல மட்டும் ஆடக் கூடாது" என ரகளை செய்து வந்தார்களோ அந்த 90ஸ் கிட்ஸ் நிலைமை அதற்குள் இப்படி தங்கள் ஐகான்களை இழந்து வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் என நினைக்கவே இல்லை என பலரும் சோஷியல் மீடியாவில் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாகவே யாரை தங்கள் ஐகான்களாக மனதில் நிறுத்திக் கொண்டு அவர்களை ரசித்து வந்தார்களோ அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் வாழ்க்கையில் இருந்து மிஸ் ஆகி செல்வது தான் காரணம் என்கின்றனர். அப்படி 90ஸ் கிட்ஸ் மிஸ் பண்ண விஷயங்களையும் 80ஸ் கிட்ஸ் இன்னமும் என்ஜாய் பண்ணும் நபர்கள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

ஓவர் சந்தோஷம்: 50 காசு கொடுத்து அடுத்த வீட்டில் ஒளியும் ஒளியும் பார்க்க வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு காத்துக் கிடந்த கடைசி தலைமுறை நாம் தான், ஹவர் சைக்கிள் எடுத்து ஓட்டி எக்ஸ்ட்ரா 10 நிமிடம் ஆகிடக் கூடாது என ஒரு ரவுண்டு சுத்தி விட்டு கடைக்காரரிடமே வந்து டைம் ஆகிடுச்சா என தொல்லை கொடுப்பது ஆசை சாக்லேட் சாப்பிட்டபடியே சின்ன சின்ன ஆசை பாடலை வாக்மேனில் கேட்பது, "துட்டு துட்டு பளபளக்குது புது நோட்டு" என அப்பா 5 ரூபாய் கொடுத்து விட்டால் 50 ரூபாய் கொடுத்தது போல துள்ளாத மனம் துள்ளும் விஜய் போல நடனமாடிக் கொண்டே செல்வது. வல்லரசு துப்பாக்கியை 30 ரூபாய் உண்டியலில் சேர்த்து வைத்து அதற்கு லேசர் லைட் எல்லாம் வைத்து குறி பார்ப்பது இன்னும் ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட அட்ராசிட்டிகளை செய்து சந்தோஷம் அடைந்தவர்கள் 90ஸ் கிட்ஸ் தான்.

Vijayakanth to Vijay: 90s kids upset for lost their demigods

விஜயகாந்த் முதல் விஜய் வரை: ஆனால், திடீரென 90ஸ் கிட்ஸ்களை இன்னமும் சக்திமான் படம் வராமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட மோசமாக விஜயகாந்த், விவேக், எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவு சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், பிறந்தது முதல் விஜய், அஜித் படங்களை பார்த்தே வளர்ந்த ரசிகர்கள் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் அதிரடி முடிவால் ரொம்பவே அப்செட் ஆகி விட்டனர். நடிகர் அஜித் பைக் டூர் சென்று விட்டு படங்களில் நடிப்பதை ரொம்பவே குறைத்துக் கொண்டார். இதற்கு மேல் வரும் புதிய நடிகர்களுக்கு எல்லாம் 90ஸ் கிட்ஸ் தீவிர ரசிகர்களாக மாறுவார்களா என்பது வாய்ப்பே இல்லை ராஜா என்கிற விஷயம் தான். ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களும் அயலான் ரேஞ்சுக்கு டல் அடித்து வரும் நிலையில், 80ஸ் கிட்ஸ் இன்னமும் ஹேப்பியாக 90ஸ் கிட்ஸை பார்த்து கிண்டலடிப்பது தான் தாங்கவே முடியாத பெருஞ்சோகமாக மாறி நிற்கிறது.

Vijayakanth to Vijay: 90s kids upset for lost their demigods

80ஸ் கிட்ஸ் இன்னும் ஹேப்பி: 72 வயதாகியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம், வேட்டையன், தலைவர் 171 என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி செம ஸ்பீடாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் விக்ரம், தக் லைஃப், இந்தியன் 2 மற்றும் 3 அன்பறிவுடன் ஒரு படம் என உலக நாயகன் கமல்ஹாசன் மாஸ் காட்டி வருகிறார். விடுதலை படத்தில் வழிநெடுக காட்டுமல்லி பாடல் போட்டு இளையராஜா இன்னமும் இளமையான ராஜாவாக அதே சிம்மாசனத்தில் சூப்பராக அமர்ந்துள்ளார் என 90ஸ் கிட்ஸை எரிகிற கொல்லியில் இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றுவது போல நல்லாவே வெறுப்பேற்றி வருகின்றனர். மாற்றம் ஒன்று தான் மாறாதது. இதுவும் கடந்து போகும் என 90ஸ் கிட்ஸ் சச்சின், தோனி ரிட்டயர் ஆன பிறகும் கோலி, ரோகித் மேட்ச்சை பார்க்க கற்றுக் கொண்டது போல சிவகார்த்திகேயன், கவின் படங்களுக்கு கூடிய சீக்கிரமே தங்களை தேற்றிக் கொண்டு பார்க்கத் தொடங்கி விடுவார்களா? அல்லது என்ன கிரிஞ்சா இருக்குன்னு கலாய்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X