Vijayakanth: விஜயகாந்துக்கு தனுஷ் குடும்பமே நன்றி கடன் பட்டு இருக்கு... கேப்டன் பண்ண உதவி தெரியுமா?
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்துக்கு நடிகர் தனுஷ் குடும்பமே நன்றி கடன் பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்ட தனுஷ் குடும்பம்
தமிழ்த் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக வாழ்ந்து மறைந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார் விஜயகாந்த். கேப்டன், புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், இன்று நம்மோடு இல்லை. நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த்.

இந்நிலையில், நடிகர் தனுஷின் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டுள்ளதாம். அதாவது ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கஸ்தூரிராஜா. விஜயகாந்த்தின் வீரம் விளைஞ்ச மண்ணு படத்தையும் கஸ்தூரிராஜா இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் விஜயகாந்த் - கஸ்தூரிராஜா இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
கஸ்தூரிராஜாவின் இரண்டு மகள்களும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரிராஜாவின் முதல் மகள் விமலா கீதா பல் மருத்துவராகவும், இரண்டாவது மகள் கார்த்திகா தேவி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர். இவர்களில் கார்த்திகா தேவிக்கு டாக்டர் சீட் கிடைக்க கேப்டன் விஜயகாந்த் தான் உதவியுள்ளார். இதுபற்றி கஸ்தூரிராஜாவே ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார். அதாவது, டாக்டர் கனவில் இருந்த கார்த்திகா, நுழைவுத் தேர்வு எழுதியும் கட் ஆஃப் மார்க்கில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்தாராம்.
இதனால், இனி டாக்டராக முடியாது என்ற விரக்தியில் வீட்டில் அழுதுகொண்டே இருந்துள்ளார் கார்த்திகா. அப்போது வேறொரு விஷயம் காரணமாக கஸ்தூரிராஜா வீட்டுக்குச் சென்ற விஜயகாந்த், கார்த்திகா அழுவதை பார்த்து என்ன பிரச்சினை என கேட்டுள்ளார். உடனே கார்த்திகாவின் மெடிக்கல் சீட் கனவு, கட் ஆஃப் மார்க் பற்றி கஸ்தூரிராஜா கூறியுள்ளார். உடனே ராமச்சந்திரா மருத்துவமனையின் உடையாருக்கு போன் செய்து பேசினாராம் விஜயகாந்த்.
இதனயடுத்து உடனே கார்த்திகாவை நேரில் வரச்சொன்ன உடையார், அவருக்கு மருத்துவம் படிக்க சீட் கொடுத்துள்ளார். அதன்பின்னர் தான் கார்த்திகா நல்ல மருத்துவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தகது. இப்படி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விஜயகாந்த் செய்த உதவியை மறக்கவே முடியாது என கஸ்தூரிராஜா, விஜயகாந்த் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் அவரது இந்த உதவி குறித்து ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











