Vijayakanth: "இப்ப யாரும் கஷ்டப்பட்டு ஹீரோ ஆகல.." கேப்டன் விஜயகாந்தின் நெப்போடிசம் அட்டாக்!
சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பகாலத்தில் சினிமாவில் வாய்ப்புத் தேடியது குறித்து சமீபத்தில் பேசியிருந்த விஜயகாந்த், தற்போதுள்ள நெப்போடிசம் பற்றியும் காட்டமாக விமர்சித்திருந்தார்.
விஜயகாந்தின் நெப்போட்டிசம் அட்டாக்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர், கேப்டன், கறுப்பு எம்ஜிஆர் என கொண்டாடப்படும் விஜயகாந்த், சினிமாவில் எவ்வித பின்னணியும் இல்லாமல் உச்சம் தொட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிப்பதற்காகவே மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர் விஜயகாந்த். தனது ஆரம்ப காலத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைந்து சென்று வாய்ப்புத் தேடியே ஹீரோவானார்.

இதுபற்றி சமீபத்தில் பேசியிருந்த விஜயகாந்த், சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்தும் வெளுத்து வாங்கியிருந்தார். அதாவது சத்யராஜ்ஜும் நானும் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்புகள் தேடினோம். அப்போதெல்லாம் மற்ற நடிகர்களை போல நடித்துக் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். வசன உச்சரிப்புகளும் சரியாக இருக்க வேண்டும்.
அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இப்போதுள்ள நடிகர்கள் யாரும் கஷ்டப்பட்டு ஹீரோ ஆகவில்லை. எல்லாருமே வாரிசுகளாக களமிறங்கிவிடுகின்றனர் என காட்டமாக விமர்சித்திருந்தார். அதனல் யாருக்கும் சினிமாவின் பின்னணியும் அங்கிருக்கும் கஷ்டங்கள் பற்றியும் தெரியவில்லை என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தின் இந்த பேச்சு இப்போதைய பல முன்னணி ஹீரோக்களுக்கு பொருந்தும் என ரசிகர்களும் கூறி வந்தனர். அதேபோல், தான் உச்சத்தில் இருந்த போது கூட விஜய், சூர்யா ஆகியோரின் ஆரம்பகால சினிமா கேரியருக்காக அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் கேப்டன் விஜயகாந்த். இந்த பெருந்தன்மையை விஜய்யும் சூர்யாவும் இப்போது கடைபிடிக்கவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை உயிரிழந்த விஜயகாந்தின் உடலுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் பல்வேறு அரசியல் பிரபலங்களும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











