என்னுடைய கட்சியில் சேர 1 கோடி உறுப்பினர்கள் தயார்- விஜயகாந்த் என்னுடைய கட்சியில் சேர 1 கோடி உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.நடிகர் விஜயகாந்த் தீவிர அரசியலில் குதிக்க நாள் பார்த்து வருகிறார். செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற உள்ள தனது ரசிகர்மன்ற மாநாட்டில் கட்சி பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் எனக்கு சரிப்பட்டுவருமா என தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய மன்றத்தில் 24 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.செப்டம்பரில் மதுரையில் ரசிகர் மன்ற மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பெயரையும், கொள்கைகளையும்அறிவிப்பேன். எந்தக் காரணைத்தையும் கொண்டு அரசியல் கட்சியை தொடங்குவதில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். அரசியலில் நான்காமராஜரையும், எம்.ஜி.ஆரையும் முன் உதாரணமாக வைத்து நான் செயல்படுவேன்.தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்த போது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பது அவர்களின் முகத்தில்தெரிந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வருகிறேன்.அரசியல் கட்சிக்கு விவசாய அணி, இளைஞர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை தேவை. எனது ரசிகர் மன்றத்தினரைகொண்டு இந்த அணிகளை நான் உருவாக்கி வருகிறேன்.எனது ரசிகர்கள் கட்டுப்பாடு உடையவர்கள். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நான் கட்சி தொடங்கினால் சேர தயாராகஇருக்கிறார்கள். எல்லோரையும் சேர்த்தால் 1 கோடி உறுப்பினர்கள் வரும். அவர்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள்.என்னுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. அந்தக் கட்சியில் எனக்கு தெரிந்தவர்கள் யாரும்இல்லை.எனக்கு தமிழ் பற்று அதிகம். அதனால் வேற்று மொழிப்படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தும் நான் மறுத்துவிட்டேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஆங்கிலம் தெரியாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன்.அரசியல் கட்சி தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்தி, ஆங்கிலம் படித்து டெல்லி போய் மந்திரி ஆகிவிடுகிறார்கள்.தமிழ் மொழியை காக்க போராட்டம் நடத்துவது தேவையற்றது. ஆங்கிலேயர்களால் அழிக்கமுடியாத தமிழை வேறு யாராலும்அழிக்க முடியாது என்றார்.

By Staff

என்னுடைய கட்சியில் சேர 1 கோடி உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் தீவிர அரசியலில் குதிக்க நாள் பார்த்து வருகிறார். செப்டம்பர் மாதம் மதுரையில் நடைபெற உள்ள தனது ரசிகர்மன்ற மாநாட்டில் கட்சி பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் எனக்கு சரிப்பட்டுவருமா என தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னுடைய மன்றத்தில் 24 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

செப்டம்பரில் மதுரையில் ரசிகர் மன்ற மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பெயரையும், கொள்கைகளையும்அறிவிப்பேன்.

எந்தக் காரணைத்தையும் கொண்டு அரசியல் கட்சியை தொடங்குவதில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன். அரசியலில் நான்காமராஜரையும், எம்.ஜி.ஆரையும் முன் உதாரணமாக வைத்து நான் செயல்படுவேன்.

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்த போது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பது அவர்களின் முகத்தில்தெரிந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வருகிறேன்.

அரசியல் கட்சிக்கு விவசாய அணி, இளைஞர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை தேவை. எனது ரசிகர் மன்றத்தினரைகொண்டு இந்த அணிகளை நான் உருவாக்கி வருகிறேன்.

எனது ரசிகர்கள் கட்டுப்பாடு உடையவர்கள். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நான் கட்சி தொடங்கினால் சேர தயாராகஇருக்கிறார்கள். எல்லோரையும் சேர்த்தால் 1 கோடி உறுப்பினர்கள் வரும். அவர்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

என்னுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. அந்தக் கட்சியில் எனக்கு தெரிந்தவர்கள் யாரும்இல்லை.

எனக்கு தமிழ் பற்று அதிகம். அதனால் வேற்று மொழிப்படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தும் நான் மறுத்துவிட்டேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஆங்கிலம் தெரியாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன்.

அரசியல் கட்சி தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்தி, ஆங்கிலம் படித்து டெல்லி போய் மந்திரி ஆகிவிடுகிறார்கள்.

தமிழ் மொழியை காக்க போராட்டம் நடத்துவது தேவையற்றது. ஆங்கிலேயர்களால் அழிக்கமுடியாத தமிழை வேறு யாராலும்அழிக்க முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X