»   »  நடிகர் சங்கத்தலைவராக நீடிப்பேன்: விஜயகாந்த் பழம்பெரும் நடிகை வரலட்சுமிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர்சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடிகர் சங்க 52வது பேரவைக் கூட்டம் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ்.எஸ்.சந்திரன், பொதுச்செயலாளர் சரத்குமார்,பொருளாளர் காளை, நடிகர்கள் விஜயகுமார், பிரபு, தியாகு, மன்சூர் அலி கான், ஜெயம் ரவி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, குமரி முத்து,எம்.எம்.பாஸ்கர், சார்லி, கே.ராஜன், நடிகை விந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம்பெரும் நடிகை வரலட்சுமி உதவி கோரி நடிகர் சங்கத்தை அணுகியிருந்தார். அவருக்குநிதியுதவி செய்வதாக கூறியிருந்தோம்.இந்த நிலையில் வரலட்சுமிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது வரவேற்புக்குரியது. இதைப் பாராட்டியும், நன்றி தெரிவித்தும்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நலிவுற்ற கலைஞர்களின் குழந்தைகளுக்கு படிப்புக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி பிளஸ்டூ வரை படிக்கும் கலைஞர்களது வாரிசுகளுக்கு ரூ.500ம், கல்லூரியில் படிப்போருக்கு ரூ. 1000 வரை வழங்க முடிவு செய்துள்ளோம்.நடிகர் சங்க வளாகத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய 5 மாடிக் கட்டடம் எழுப்பும் பணிகள் விரைவில் தொடங்கும். சிவாஜி மணிமண்டபம் கட்டநடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.நடிகர் சங்கத்துக்காக புதிய இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிவாஜி மணிமண்டபத்திற்கும் தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதன் மூலம்வெளிநாட்டு ரசிகர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படும்.நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கலைவிழா நடத்துவது எப்போது என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். அதே போல நடிகர் சங்க பொன்விழாகொண்டாட்டம் பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.சங்கக் கூட்டத்தில் முக்கிய நடிகர்கள் வரவில்லை என்று கூறினார்கள். வேலை இருப்பவர்கள் தகவல் தெரிவித்து விட்டு வராமல் இருக்கலாம். தேவைப்படும் போதுஎல்லோரும் வருவார்கள். அது தான் எங்கள் பலம்.நடிகர் சங்கத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சங்கத்தின் துணைத் தலைவராக அதிமுக எம்.பி., எஸ்.எஸ்.சந்திரனும்,பொதுச் செயலாளராக திமுக எம்.பி., சரத்குமாரும் இருக்கிறார்கள். இதுபோல எம்.எல்.ஏக்களான ராதாரவி, நெப்போலியன் உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள்இங்கு உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.இதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அரசியல் வேறு. நடிகர் சங்கம் வேறு.எனவே நான் கட்சி தொடங்கினாலும் நடிகர் சங்க தலைவராக நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தொடர்ந்து தலைவராக இருப்பேன்.இந்த சங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுப்பினராக இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் நியமன உறுப்பினராக உள்ளார். எம்ஜிஆர் கூட நடிகர் சங்கத்தலைவராக இருந்திருக்கிறார். எனவே அரசியலுக்கும், நடிகர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடிகர், நடிகைகள் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் விஜயகாந்த்.

நடிகர் சங்கத்தலைவராக நீடிப்பேன்: விஜயகாந்த் பழம்பெரும் நடிகை வரலட்சுமிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர்சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடிகர் சங்க 52வது பேரவைக் கூட்டம் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ்.எஸ்.சந்திரன், பொதுச்செயலாளர் சரத்குமார்,பொருளாளர் காளை, நடிகர்கள் விஜயகுமார், பிரபு, தியாகு, மன்சூர் அலி கான், ஜெயம் ரவி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, குமரி முத்து,எம்.எம்.பாஸ்கர், சார்லி, கே.ராஜன், நடிகை விந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம்பெரும் நடிகை வரலட்சுமி உதவி கோரி நடிகர் சங்கத்தை அணுகியிருந்தார். அவருக்குநிதியுதவி செய்வதாக கூறியிருந்தோம்.இந்த நிலையில் வரலட்சுமிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது வரவேற்புக்குரியது. இதைப் பாராட்டியும், நன்றி தெரிவித்தும்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நலிவுற்ற கலைஞர்களின் குழந்தைகளுக்கு படிப்புக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி பிளஸ்டூ வரை படிக்கும் கலைஞர்களது வாரிசுகளுக்கு ரூ.500ம், கல்லூரியில் படிப்போருக்கு ரூ. 1000 வரை வழங்க முடிவு செய்துள்ளோம்.நடிகர் சங்க வளாகத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய 5 மாடிக் கட்டடம் எழுப்பும் பணிகள் விரைவில் தொடங்கும். சிவாஜி மணிமண்டபம் கட்டநடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.நடிகர் சங்கத்துக்காக புதிய இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிவாஜி மணிமண்டபத்திற்கும் தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதன் மூலம்வெளிநாட்டு ரசிகர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படும்.நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கலைவிழா நடத்துவது எப்போது என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். அதே போல நடிகர் சங்க பொன்விழாகொண்டாட்டம் பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.சங்கக் கூட்டத்தில் முக்கிய நடிகர்கள் வரவில்லை என்று கூறினார்கள். வேலை இருப்பவர்கள் தகவல் தெரிவித்து விட்டு வராமல் இருக்கலாம். தேவைப்படும் போதுஎல்லோரும் வருவார்கள். அது தான் எங்கள் பலம்.நடிகர் சங்கத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சங்கத்தின் துணைத் தலைவராக அதிமுக எம்.பி., எஸ்.எஸ்.சந்திரனும்,பொதுச் செயலாளராக திமுக எம்.பி., சரத்குமாரும் இருக்கிறார்கள். இதுபோல எம்.எல்.ஏக்களான ராதாரவி, நெப்போலியன் உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள்இங்கு உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.இதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அரசியல் வேறு. நடிகர் சங்கம் வேறு.எனவே நான் கட்சி தொடங்கினாலும் நடிகர் சங்க தலைவராக நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தொடர்ந்து தலைவராக இருப்பேன்.இந்த சங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுப்பினராக இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் நியமன உறுப்பினராக உள்ளார். எம்ஜிஆர் கூட நடிகர் சங்கத்தலைவராக இருந்திருக்கிறார். எனவே அரசியலுக்கும், நடிகர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடிகர், நடிகைகள் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் விஜயகாந்த்.

Subscribe to Oneindia Tamil

பழம்பெரும் நடிகை வரலட்சுமிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தென்னிந்திய நடிகர்சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகர் சங்க 52வது பேரவைக் கூட்டம் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ்.எஸ்.சந்திரன், பொதுச்செயலாளர் சரத்குமார்,பொருளாளர் காளை, நடிகர்கள் விஜயகுமார், பிரபு, தியாகு, மன்சூர் அலி கான், ஜெயம் ரவி, இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, குமரி முத்து,எம்.எம்.பாஸ்கர், சார்லி, கே.ராஜன், நடிகை விந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம்பெரும் நடிகை வரலட்சுமி உதவி கோரி நடிகர் சங்கத்தை அணுகியிருந்தார். அவருக்குநிதியுதவி செய்வதாக கூறியிருந்தோம்.

இந்த நிலையில் வரலட்சுமிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இது வரவேற்புக்குரியது. இதைப் பாராட்டியும், நன்றி தெரிவித்தும்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நலிவுற்ற கலைஞர்களின் குழந்தைகளுக்கு படிப்புக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி பிளஸ்டூ வரை படிக்கும் கலைஞர்களது வாரிசுகளுக்கு ரூ.500ம், கல்லூரியில் படிப்போருக்கு ரூ. 1000 வரை வழங்க முடிவு செய்துள்ளோம்.

நடிகர் சங்க வளாகத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய 5 மாடிக் கட்டடம் எழுப்பும் பணிகள் விரைவில் தொடங்கும். சிவாஜி மணிமண்டபம் கட்டநடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

நடிகர் சங்கத்துக்காக புதிய இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிவாஜி மணிமண்டபத்திற்கும் தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதன் மூலம்வெளிநாட்டு ரசிகர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்படும்.

நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கலைவிழா நடத்துவது எப்போது என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். அதே போல நடிகர் சங்க பொன்விழாகொண்டாட்டம் பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

சங்கக் கூட்டத்தில் முக்கிய நடிகர்கள் வரவில்லை என்று கூறினார்கள். வேலை இருப்பவர்கள் தகவல் தெரிவித்து விட்டு வராமல் இருக்கலாம். தேவைப்படும் போதுஎல்லோரும் வருவார்கள். அது தான் எங்கள் பலம்.

நடிகர் சங்கத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சங்கத்தின் துணைத் தலைவராக அதிமுக எம்.பி., எஸ்.எஸ்.சந்திரனும்,பொதுச் செயலாளராக திமுக எம்.பி., சரத்குமாரும் இருக்கிறார்கள். இதுபோல எம்.எல்.ஏக்களான ராதாரவி, நெப்போலியன் உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள்இங்கு உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அரசியல் வேறு. நடிகர் சங்கம் வேறு.

எனவே நான் கட்சி தொடங்கினாலும் நடிகர் சங்க தலைவராக நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தொடர்ந்து தலைவராக இருப்பேன்.

இந்த சங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுப்பினராக இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியும் நியமன உறுப்பினராக உள்ளார். எம்ஜிஆர் கூட நடிகர் சங்கத்தலைவராக இருந்திருக்கிறார்.

எனவே அரசியலுக்கும், நடிகர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடிகர், நடிகைகள் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் விஜயகாந்த்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil