Vijayakanth - சாப்பிடும்போது பாதில எழுப்பிட்டாங்க.. கலங்கிப்போய்ட்டேன்.. விஜயகாந்த் சொன்ன சோக கதை

சென்னை: ரசிகர்களின் பெரும் அன்பை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். உடல்நலக்குறைவால் அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. இறுதிச்சடங்கு நாளை நடக்கும் சூழலில் அவரது உடல் தற்போது தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பொதுமக்களும், பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

விஜயகாந்த் ரசிகர்களிடம் பெரிய அன்பை சம்பாதித்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து கடுமையான கஷ்டங்களை சந்தித்தார். ஒருவழியாக சினிமா வாய்ப்பை பெற்று ஹீரோவாகிவிட்டார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த் கடைசியாக சகாப்தம் படத்தில் நடித்தார். அதனுடன் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

Vijayakanths Old Interview Goes Viral On Social Media

தேமுதிக: இதற்கிடையே தனக்கு ரசிகர்களிடம் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்ட அவர் கடந்த 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் சில தவறான முடிவுகளால் அரசியல் தளத்தில் சறுக்கலை சந்தித்தார்.

வள்ளல் விஜயகாந்த்: அரசியல் தளத்தில் சறுக்கலை சந்தித்தாலும் அவர் மிகச்சிறந்த மனிதர் என்று பெயர் எடுத்தவர். அதற்கு முக்கியமான காரணம் விஜயகாந்த் உதவி செய்ததுதான். அவரை வள்ளல் என்றே பலரும் அழைப்பார்கள். இந்த சூழலில் உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

விஜயகாந்த் பேட்டி: இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு விஜயகாந்த் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களை தாங்கிகிட்டவங்களில் ஒருத்தன் நான். இங்கிலீஷ்ல "இன்சல்ட்" னு சொல்வாங்களே அதுதான். எனது அறிமுக படம் அது. முதல் நாள் ஷூட்டிங். இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்க கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. ஆனா பாப்புலர் ஆனவங்களுக்கு ஏக உபசரிப்புகள்.

வரவே இல்லை: நான் ஒரு மூலையிலே நின்னுகிட்டிருப்பேன். முதல் படம் பண்ணிய உடனே கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பிச்சேன். அதைவைத்து விடாம பல இயக்குநர்களை சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, "அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு விஜயகாந்த்"னு சொல்லுவாங்க. அடுத்து ஒரு படம் பண்ணும் போது அதில் நடித்த கதாநாயகி பிரபலமானவங்க. அவங்க ரொம்ப பிஸி வேற. படப்பிடிப்பு அன்னிக்கு காலையிருந்து மத்தியானம் சாப்பாடு வேளை வரைக்கும் அவங்க வரலை.

பசி சார்: எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே அவங்க வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடகூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துகிட்டு போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டுருந்தேங்கறது உண்மை.

எழுதி வெச்சுக்கங்க: இன்னிக்கு சொல்றேன்... எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுய கெளரவத்தையும் இழந்து நடிச்சுகிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படி செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தை குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன்.
இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானபடுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரவிலலி.

சாப்பாடு இருக்கும்: நாம பட்ட கஷ்டங்களை மத்தவங்களும் படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஒரளவுக்கு அந்த பெயர் வாங்கியிருக்கான். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படகூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பி போககூடாது. தினமும் முப்பது நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X