Vijayakanth - விஜயகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோ.. சீக்கிரம் வாங்க கேப்டன்.. ரசிகர்கள் உருக்கம்
சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) விஜயகாந்த் உடற்பயிற்சி செய்யும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் கோலிவுட்டில் பீக்கில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பயங்கரமாக டஃப் கொடுத்த ஹீரோக்களில் முதன்மையானவர் விஜயகாந்த். கறுப்பான உருவம், சாமானிய உடல்மொழி, சிறந்த நடிப்பு, ஆக்ஷன் என ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்தார். அவரை பார்த்த அனைவருமே நம்ம ஊர்க்காரர்போல் இருக்கிறாரே என்றுதான் பேசிக்கொண்டார்கள்.

கேப்டன்: ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் அவர். ஈழ மக்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் முதன்முதலில் விஜயகாந்த்தான் உண்ணாவிரத போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அதேபோல் நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார்.
உடல்நிலை: சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவர் அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓய்வில் இருந்துவருகிறார் அவர்.
மருத்துவமனையில் அமைதி: இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்னதாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் கவலையடைந்தனர். ஆனால் அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால் பலரும் நிம்மதியடைந்திருக்கின்றனர்.
பழைய வீடியோ: இந்நிலையில் விஜயகாந்த் குறித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதில், விஜயகாந்த் லுங்கியும், பனியனும் அணிந்தபடி அட்டகாசமாக உடற்பயிற்சி செய்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் ச்ச எப்படி ஃபிட்டா இருந்த மனுஷன் இப்ப இப்படி ஆகிட்டாரே.. சீக்கிரம் வாங்க கேப்டன் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
மருத்துவமனை அறிக்கை: முன்னதாக மியாட் மருத்துவமனை விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்த்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இன்னும் சில நாட்கள் அவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். விரைவில் வீடு திரும்புவார். பிறகு அவர் தனது வழக்கமான செயல்பாடுகளை செய்ய முடியும்" என குறிப்பிட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











