லிங்கா படத்திற்காக சீரியலுக்கு லீவ் போட்ட வெற்றிவேல் அண்ணாச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தில் நடிகர் விஜயகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் அவர் தான் நடிக்கும் சீரியலுக்கு சில மாதங்கள் லீவ் போட்டுள்ளார்.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரில் நடிகர் விஜயகுமார் வெற்றிவேல் அண்ணாச்சியாக நடித்து வருகிறார்.
ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கும் இந்தத்தொடரில் விஜயகுமார்தான் தாய்மாமன்.
கதாநாயகியின் திருமணத்தில் கூட தாய்மாமன் இல்லை. ஒருவேளை இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு வேறு யாரையாவது தாய்மாமன் கதாபாத்திரத்திற்கு போட்டுவிடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

லிங்கா பட சூட்டிங்
விசாரித்த போது லிங்கா பட சூட்டிங்கில் விஜயகுமார் பிசியானதே காரணம் என்று தெரியவந்துள்ளது. ரஜினியின் பல திரைப்படங்களில் விஜயகுமார் நடித்துள்ளார் பணக்காரன் படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்தார் விஜயகுமார்.

ரஜினி – கே.எஸ். ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் சில காட்சிகளாவது தலைகாட்டுவார் விஜயகுமார். லிங்கா திரைப்படம் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் காம்பினேசனில் உருவாகியுள்ளது.

சீரியலுக்கு லீவ்
இந்தப்படத்தில் விஜயகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டுள்ளார். எனவேதான் வம்சம் சீரியலில் நடிப்பதற்கு லீவ் போட்டிருக்கிறாராம் விஜயகுமார்.

தங்கம் டூ வம்சம்
விஜயகுமார் ஏற்கனவே ரம்யாகிருஷ்ணனின் தங்கம் சீரியலில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக வம்சம் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











