Sridevi Vijayakumar: இவங்களுக்கு வயசே ஏறாதா? மெழுகு சிலைப்போல இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்!
சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் க்யூட்டான புகைப்படத்தைப் பார்த்த பேன்ஸ் உங்களுக்கு வயசே ஆகாதா என கேட்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட இவர், மாடலிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவியை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஸ்ரீதேவி விஜயக்குமார்: திரைத்துறையில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். அவருடைய மகள்களான வனிதா, பரீதா, ஸ்ரீதேவி என அனைவருமே திரைத்துறையில் நடிகைகளாக வலம் வந்தவர்கள் தான்.
ஹிட் படங்களில்: விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகளான ஸ்ரீதேவி விஜயக்குமார். சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி,காதல் வைரஸ் திரைப்படத்தில் கதாநாயகியானார். இதைத் தொடர்ந்து, தித்திக்குதே, தேவதையைக் கண்டேன், பிரியமான தோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் தனுஷூடன் இணைந்து இவர் நடித்த தேவதையைக் கண்டேன் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

சினிமாவை விட்டு விலகினார்: தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த இவர், 2009ம் ஆண்டு ராகுல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். திரையிலிருந்து ஸ்ரீதேவி விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கணவர், குழந்தை மற்றும் தன் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
வயசே ஆகாதா: தற்போது, ஸ்ரீ தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் புடவையில் இருக்கும் போட்டோவை அப்லோடு செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா என்றும், 16 வருஷத்திற்கு முன்பு பார்த்தது போல அப்படியே இருக்கீங்க என்று போட்டோவிற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











