விஜயகுமார் பேத்தி காலில் விழுந்த மாப்பிள்ளை.. திருமண விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. செம!

சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவுக்கும் - திலன் என்கிற வரனுக்கும் மகாபலிபுரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு திருமணம் ஆன அதே ரெஸ்டாரன்டில் திருமணம் நடைபெற்றது. நடிகர் விஜயகுமாரின் குடும்பம் மிகப்பெரிய சினிமா குடும்பம் என்பது அனைவரும் ஒன்று தான். மூத்த மனைவி முத்துக்கண்ணுவின் மகள் அனிதாவின் மகள் தியாவுக்குத்தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திடீரென மணமகள் காலில் மணமகன் தொட்டுக் கும்பிடும் வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா என இரு மகள்கள் மற்றும் அருண் விஜய் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இருவரும் மருத்துவம் படித்து டாக்டர்களாக மாறிவிட்டனர். அருண் விஜய் மட்டும் அப்பா போல சினிமாவில் நடிகராக மாறி ஹீரோவாக வலம் வருகிறார்.

Vijayakumar grand daughter Diya husband touch down her wife legs video goes trending

விஜயகுமார் பேத்தி திருமணம்: அம்மா அனிதாவை போலவே மணமகள் தியாவும் வெளிநாட்டில் மருத்துவம் படித்துள்ளார் என்றும் திலன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தை முடிந்து மாசி மாதத்தில் வந்த சுபமுகூர்த்தத்தில் தியா மற்றும் திலன் திருமணம் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டரன்ட்டில் களைகட்டியது. ஒரு வாரமாகவே பந்தக்கால் நடுவதில் இருந்தே ஒட்டுமொத்த சொந்தங்களும் ஒன்றுக் கூடி தியாவுக்கு நலங்கு எல்லாம் வைத்து மெஹந்தி போட்டு அமர்க்களப்படுத்தி விட்டனர்.

ரஜினிகாந்த் முதல் மீனா வரை: தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் விஜயகுமார் மகளின் திருமணத்திலும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகின. வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வந்தாலும், தனது நெருங்கிய நண்பரான விஜயகுமார் பேத்தி திருமணத்தை சூப்பர் ஸ்டார் மிஸ் செய்ய விரும்பவில்லை. அதே போல நடிகை மீனா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகளவில் வலம் வருகின்றன.

காலை தொட்டு வணங்கிய மாப்பிள்ளை: திருமண வீடியோக்கள் ஒரு பக்கம் டிரெண்டாகி வரும் நிலையில், திருமணத்துக்கு தியாவின் பெற்றோர்களான அனிதா மற்றும் கோகுல் ரெடியாகி வரும் வீடியோக்களும் தீயாக பரவி வருகின்றன. இதற்கிடையே மணகன் திலன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் தியாவின் காலை தொட்டு வணங்கிய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

இருவரும் சமம்: மாப்பிள்ளைக்கு மணப்பெண் அடங்கி போக வேண்டும் என்றும் மாப்பிள்ளை காலில் மணமகள் தான் விழ வேண்டும் என்கிற பழைய சித்தாந்தங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு மணமகள் தனது சரிபாதி என நினைத்து திலன் அவர் காலை தொட்டுக் கும்பிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் திலன் செய்கையை பாராட்டி கமெண்ட்டுகள் போட்டு வருகின்றனர்.

அருண் விஜய் ஹேப்பி: தாய் மாமனான அருண் விஜய் தனது மருமகள் திருமணத்தில் செம ஹேப்பி. கையில் மைக்கை வைத்துக் கொண்டு திருமண விளையாட்டுகளின் போது மணமகனையும் மணமகளையும் போட்டு கலாய்த்து எடுத்தக் காட்சிகள் வெளியாகி உள்ளன. கோலாகலமாக நடந்த திருமணத்தில் வனிதா விஜயகுமார் மட்டும் கலந்து கொள்ளவில்லையே என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X