ஆட்டம் பாட்டத்துடன் நடக்கும் விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. ஒன்று கூடிய குடும்பம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவின் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. இவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள்கள் உள்ளனர். அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, முதல் மனைவி சம்மதத்துடன், மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் விஜயகுமார்.

vijayakumar granddaughter diya wedding function photos trending on social media

அனிதா விஜயகுமார்: விஜயக்குமாரின் 2வது மகளான அனிதா விஜயக்குமார் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தனது கல்லூரியில் படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் குடும்பத்தில் சினிமாவில் முகம் காட்டாதவர் அனிதா தான். இவருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் கோகுல் என்கிற மகனும் உள்ளனர். இவரின் மகள் தான் தியா வெளிநாட்டில் மருத்துவம் படித்துள்ளார். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள். ஆனால், சமூக வலைதளங்களில் அவ்வப்போது குடும்ப போட்டோக்களை பகிர்ந்து வந்தனர்.

vijayakumar granddaughter diya wedding function photos trending on social media

நாளை திருமணம்: இந்த நிலையில் இவரது மகள் தியாவின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த திருமணத்திற்காக இரண்டு மாதத்திற்கு முன்பே அனிதா விஜயகுமார் சென்னை வந்து திருமண வேலைகளை கவனித்து வந்தார். அவரது திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் பீச்சோரம் அமைந்துள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற உள்ளது. அதாவத நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் நடந்த இடத்தில் நடைபெற உள்ளது.

vijayakumar granddaughter diya wedding function photos trending on social media

பந்தக்கால் நடும் விழா: திருமண விழா களைகட்டி வரும் நிலையில், நேற்று அனிதா விஜயகுமார் வீட்டில் பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மேலும், சங்கீத் மற்றும் மெஹத்தி பங்ஷனும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜயகுமார், கவிதா விஜயகுமார் அருண் விஜய், ப்ரீத்தா என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பங்கேற்றனர். இதில், குடும்பத்தினர் அனைவரும் ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி அலப்பறை செய்துவிட்டனர். இதில், பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை, அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரின் பதிவில் ஒவ்வொரு தாயின் கனவும் தன் மகள்களின் திருமணமாகும். கடந்த சில மாதங்களாக இவ்வளவு திட்டமிடலும் என் இளவரசியின் கொண்டாட்டத்தை பார்க்கத்தான். இந்த மகிழ்ச்சிக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் எனது தூண்களாக இருந்தனர். உங்கள் அனைவரின் ஆசிகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் பலரும் தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X