Anitha Vijayakumar - வீடெல்லாம் இல்லை அரண்மனைதான்.. தியேட்டரிலிருந்து சகல வசதிகளுடன் விஜயகுமாரின் மகள் வீடு

சென்னை: Anitha Vijayakumar (அனிதா விஜயகுமார்) விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான அனிதா விஜயகுமார் தனது புதிய வீடு குறித்த ஹோம் டூர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் அவர் 90களில் மிகவும் பிரபலமான குணசித்திர நடிகராக வலம் வந்தவர். நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்களில் விஜய்குமாரின் நடிப்பு பலரையும் ரசிக்கும்படி செய்தது.

 Vijayakumars Daughter Anitha Home Tour Video is Trending on Social Media

குடும்பம்: தஞ்சாவூர் மாவட்டம் நாட்டுச்சாலையை பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவி முத்துக்கண்ணு உயிரிழந்த சூழலில் நடிகை மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மஞ்சுளாவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அருண் விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, வனிதா, அனிதா என மொத்தம் ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அருண் விஜய்: அருண் விஜய்யும் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர்தான். இருந்தாலும் அவருக்கு சரியான திருப்புமுனை கிடைக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மாஸ் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க ஆரம்பித்தன. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார்.

 Vijayakumars Daughter Anitha Home Tour Video is Trending on Social Media

மகள்கள்: மகள்களில் ஸ்ரீதேவியும், வனிதாவும் நடிகைகள். ப்ரீதா இயக்குநர் ஹரியை திருமணம் செய்துகொண்டார். அனிதா ஒரு மருத்துவர். வனிதா மட்டும் விஜயகுமார் மற்றும் தனது சகோதரர், சகோதரிகளுடன் பேசாமல் இருக்கிறார். ஸ்ரீதேவி தித்திக்குதே, தேவதையை கண்டேன், ப்ரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

 Vijayakumars Daughter Anitha Home Tour Video is Trending on Social Media

அனிதா வீடு: இந்நிலையில் மருத்துவரான அனிதா புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அதற்கான கிரஹபிரவேசம் சமீபத்தில் நடந்தது. அதில் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் அவர் தனது வீடு பற்றிய ஹோம் டூர் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் வீட்டில் சகல வசதிகளும் இருக்கின்றன.

நவீனமான அறைகள், விசாலமான பெட் ரூம், பூஜை அறை உள்ளிட்டவைகள் இருக்கின்றன. மேலும் குடும்பத்துடன் வீட்டிலேயே படம் பார்ப்பதற்கு வசதியாக திரையரங்கு வசதியும் இருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இது வீடு இல்லை அரண்மனைதான் என கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X