என்னிடமும் அதை கேட்டார்கள்… நடிகை விஜயலட்சுமி சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : படவாய்ப்புக்காக என்னிடமும் அதை கேட்டார்கள் என்று நடிகை விஜயலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல இயக்குநரின் மகளுகே இந்த நிலைமையா என இந்த பேட்டியைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித், தேவயானி நடித்த காதல்கோட்டை என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மகள்தான் விஜயலட்சுமி.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய விஜயலட்சுமி, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி 2007ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை28 திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இதையடுத்து, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே, தனது பள்ளி நண்பரான பெரோசை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

சர்வைவர் டைட்டிலை வென்றார்

சர்வைவர் டைட்டிலை வென்றார்

பின்னர், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார் ஆனால் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ஜீ தொலைக்காட்சியில் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 90 நாட்கள் அந்த நிகழ்ச்சியிலிருந்து சர்வைவர் டைட்டிலை வென்றார்.

வாழ்க்கையில் தோல்வியே இல்லை

வாழ்க்கையில் தோல்வியே இல்லை

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் கௌதமியின் கேள்விக்கு பதிலளித்த விஜயலட்சுமி, என் வாழ்க்கையில் தோல்வியாக நான் எதையும் பார்த்தது இல்லை, ஆனால், வாழ்க்கையில் பல மாற்றங்களை நான் சந்தித்து இருக்கிறேன். நைட் தூங்கும் போது எல்லா கவலையும் நினைத்து தூங்காமல் புறண்டு புறண்டு படுக்காமல், படுத்த உடன் தூங்கம் வருகிறது. இதுதான் என் வெற்றி என்று நினைக்கிறேன்.

சினிமாவில் அந்த விஷயம்

சினிமாவில் அந்த விஷயம்

இதைத்தொடர்ந்து, சினிமாவில் படுக்கைக்கு அழைக்கு விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜயலட்சுமி, ஒரு நல்ல படம் வெற்றியடைய வேண்டும் என்றாலே அதற்கு கண்டிப்பாக 10 பேரின் உழைப்பு நிச்சயமாக தேவைப்படும். இதனால், சில விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிலர் இருக்கிறார்கள். எந்த இயக்குநரும் நேரடியாக அது பண்ணுவியா என்று கேட்பதில்லை. ஆனால் சிலர் இயக்குநர் அதை கேட்காமலே செய்ய தயாராக இருக்கிறார்கள்.

என்னிடமும் அதை கேட்டார்கள்

என்னிடமும் அதை கேட்டார்கள்

அவர்கள் கேட்காமலே செய்வதால், மற்ற நடிகைகள் இடமும் அதை எதிர்பார்க்கிறார்கள். இது அனைத்து இடங்களில் நடக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால், பல இடங்களில் இது நடக்கிறது. எனக்கும் கூட இது நடந்தது. ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அதிர்ச்சியான விஷயத்தை நடிகை விஜயலட்சுமி கூறினார்.

சீரியலில் இருந்து விலகினேன்

சீரியலில் இருந்து விலகினேன்

தொடர்ந்து பேசிய விஜயலட்சுமி, நாயகி சீரியலில் இருந்து விலகியது குறித்து பேசினார். சன் டிவியில் பிரைம் டைமில் வந்த சீரியல் நாயகி, அந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது அந்த சீரியலும் டிஆர்பியில் முதல் இடம் பிடித்த போது, எனக்கும் சீரியல் இயக்குநருக்கும் கொஞ்சம் கருத்துவேறுபாடு சண்டை ஏற்பட்டதை அடுத்து அந்த சீரியலில் இருந்து வெளியேறினேன் என நடிகை விஜயலட்சுமி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X