கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... !

சென்னை : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை இயக்க தயாராகி கொண்டுள்ளார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.

நடிகை நிரஞ்சனி அகத்தியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பிரியாணி செய்யும்போது தேசிங் பெரியசாமியை விஜயலட்சுமி பாடாய்படுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குனராக அறிமுகமானார்

இயக்குனராக அறிமுகமானார்


சென்ற ஆண்டு துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், விஜே ரக்ஷன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் அசத்தலான நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி திரையில் சக்கைப்போடு போட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் தேசிங் பெரியசாமி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முன்னணி நடிகரை இயக்க

முன்னணி நடிகரை இயக்க

இப்போதுள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் ஏமாற்றலாம் என்பதை காட்சிக்கு காட்சி சுவாரசியமாக பல ட்விஸ்டுகள் வைத்து பட்டையை கிளப்பி இருந்த தேசிங் பெரியசாமி முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றியைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தில் முன்னணி நடிகர் ஒருவரை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்த தேசிங் பெரியசாமி தன்னுடைய படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனி அகத்தியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாண்டிச்சேரியில் பிரபல ரிசார்ட் ஒன்றில் திருமணம் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது திரைப்பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

க்யூட்டான சண்டை

க்யூட்டான சண்டை

நிரஞ்சனி அகத்தியனும் நடிகை விஜயலட்சுமியும் சகோதரிகள். இந்த நிலையில் நிரஞ்சனியின் பிறந்தநாளுக்கு தேசிங் பெரியசாமி ஸ்பெசலாக பிரியாணி சமைக்க 5 கிலோ பிரியாணிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என விஜயலட்சுமிக்கும் தேசிங்கு பெரியசாமிக்கு இடையே பெரும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இவர்களது இந்த க்யூட்டான சண்டை போடும் வீடியோவை தற்போது விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு பிரியாணிக்கு இவ்ளோ அக்கப்போரா விஜிமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X