'நாற்பதாண்டு கால சினிமா வாழ்க்கையில..' ரசிகர்களுக்கு அசத்தலாக நன்றி சொன்ன முன்னாள் ஹீரோயின்!

By

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை அடுத்து பிரபல நடிகை நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended Video

விஜயசாந்தியின் செம 'கிக்'.. தீயாய் பரவும் வீடியோ!

தமிழில், கல்லுக்குள் ஈரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயசாந்தி.

ரஜினியின் நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ்., மன்னன் உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றார்.

லேடி சூப்பர்ஸ்டார்

லேடி சூப்பர்ஸ்டார்

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவை ஒதுக்கி வைத்தார். 13 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

இந்நிலையில், மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கவேரு என்ற தெலுங்கு படத்தில் மீண்டும் நடித்தார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தபடம் ஹிட்டானது. இதையடுத்து மேலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேசி வந்தனர்.

தெலுங்கு சினிமா

தெலுங்கு சினிமா

அவர் அதிக சம்பளம் கேட்பதால் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் தெலுங்கு சினிமாவுக்கு வந்து 40 வருடம் ஆகியுள்ளது. இவர் தெலுங்கில் 'கில்லாடி கிருஷ்ணுடு' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தது பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா.

விஜயசாந்தி நன்றி

விஜயசாந்தி நன்றி

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி 40 வருடம் ஆனதை அடுத்து, ரசிகர்களுக்கு விஜயசாந்தி நன்றி தெரிவித்துள்ளார். 'என் முதல் தெலுங்கு படம் கில்லாடி கிருஷ்ணுடு ரிலீஸ் ஆகி 40 வருடங்கள் ஆகின்றன. இந்த நாற்பதாண்டு காலத்தில் தெலுங்கு சினிமா ரசிகர்கள், சிறந்த இடத்தை எனக்கு அளித்துள்ளனர்.

விஜய நிர்மலா

விஜய நிர்மலா

இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுக்கும் அவர் மனைவி நடிகை விஜய நிர்மலாவுக்கும் நன்றி' என்று தெலுங்கில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X