13 வருடத்துக்குப் பின் ரீஎன்ட்ரியான ஹீரோயின்.. வாய்ப்புகளை நிராகரிக்கிறாராம்.. இதுதான் காரணமா?

By

சென்னை: மீண்டும் நடிக்க வந்த அந்த முன்னாள் ஹீரோயின் படங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள்.

தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், விஜயசாந்தி.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அப்போது அழைக்கப்பட்டார்.

அரசியலில் ஈடுபட்டார்

அரசியலில் ஈடுபட்டார்

பின்னர் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். கடந்த 13 வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென மீண்டும் நடிக்க வந்தார். தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு நடித்த சரிலேரு நீக்கவேரு என்ற படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்தார். அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின்.

முதல் ஹீரோ

முதல் ஹீரோ

பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 11 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றது. இதுபற்றி விஜயசாந்தி, 1979 ஆம் ஆண்டில் நடிப்பைத் தொடங்கினேன். 2020 ஆம் ஆண்டு வரை நடித்துக் கொண்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் பல படங்களில் நடித்திருந்தாலும் என் முதல் ஹீரோ, கிருஷ்ணாதான் (மகேஷ்பாபு அப்பா) என்று கூறி இருந்தார்.

மீண்டும் சினிமா

மீண்டும் சினிமா

இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, ரசிகர்களுக்கு விஜயசாந்தி நன்றி தெரிவித்திருந்தார். இதுபற்றி ட்விட்டரில், என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்துவந்த இயக்குனர் அனில், ஹீரோ மகேஷ்பாபுக்கு நன்றி. தமிழில் கல்லுக்குள் ஈரம் படத்தில் 1979 ஆம் ஆண்டு அறிமுகமானேன். தெலுங்கில் கில்லாடி கிருஷ்ணுடு மூலம் அறிமுகமானேன். இப்போது வரை எனது சினிமா வாழ்க்கையில் பங்களித்த அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்திருந்தார்.

நம்பர் ஒன் ஹீரோயின்

நம்பர் ஒன் ஹீரோயின்

இந்நிலையில் சினிமாவில் மீண்டும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம், விஜயசாந்தி. அவரிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முயன்றதாகவும் அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. 90 களில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்தவர் விஜயசாந்தி. இப்போது அம்மா கேரக்டர்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் வாய்ப்புகளை நிராகரிக்கிறார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X