முதல்ல அப்பா கூட நடிச்சேன், இப்ப மகனோட நடிக்கிறேன்...அடுத்தாப்ல... பிரபல நடிகைக்கு இப்படியொரு ஆசை

By

ஐதராபாத்: பிரபல ஹீரோவின் அப்பாவுடன் முதலில் நடித்தேன், இப்போது மகனுடன் நடிக்கிறேன் அடுத்து அவர் மகனுடன் நடிக்க ஆசை இருக்கிறது பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் விஜயசாந்தி.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

அரசியலில் ஈடுபட்டார்

அரசியலில் ஈடுபட்டார்

பின்னர் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவை ஒதுக்கி வைத்தார். இந்நிலையில் 13 வருடத்துக்குப் பிறகு, இப்போது நடிக்க வந்துள்ளார். மகேஷ் பாபு நடிக்கும் சரிலேரு நீக்கவேரு என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இதுபற்றி விஜயசாந்தி கூறும்போது, 1979 ஆம் ஆண்டில் நடிப்பைத் தொடங்கினேன். 2020 ஆம் ஆண்டு வரை நடித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி. தெலுங்கில் நான் சிரஞ்சீவியுடன் பல படங்களில் நடித்திருந்தாலும் என் முதல் ஹீரோ, கிருஷ்ணாதான்.

24 கேரட் தங்கம்

24 கேரட் தங்கம்

இப்போது அவர் மகன் மகேஷ்பாபு படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருப்பது ஆச்சரியம்தான். அடுத்து மகேஷ் பாபுவின் மகன் கவுதமுடன் நடிக்க வேண்டும். மகேஷ் 24 கேரட் தங்கம் போல இருக்கிறார். மிகவும் எளிமையானவர் என்றார்.

பிக் பிரதர்

பிக் பிரதர்

இந்தப் படத்தை அடுத்து அவர் மோகன்லால் நடித்துள்ள, பிக்பிரதர் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார் விஜயசாந்தி. இதிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X