திரைத் துளி
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சென்னையில் இன்று (5ம்தேதி) தொடங்கியது.
நிர்வாகிகள் தேர்தல் இம் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுதொடங்கியது. தற்போது தலைவர் பதவியில் உள்ள விஜயகாந்த் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளார்.
இருப்பினும் அவரையே மீண்டும் தலைவர் தேர்தலில் நிறுத்த ஒரு குரூப் முயற்சித்து வருகிறது.
தன்னை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே போட்டியிடுவது என்ற முடிவில் இருக்கிறாராம் கேப்டன்.இதையடுத்து போட்டியில்லாமல் சுமூகமாகப் பேசி விஜய்காந்தை ஜெயிக்க வைக்க அவரது ஆதரவுப் படைகளத்தில் குதித்துள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு சரத்குமாரும், துணைத் தலைவர்களாக எஸ்.எஸ்.சந்திரன், நெப்போலியனும் மீண்டும்போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.
முதல் நாளான இன்று யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications











