»   »  கேரள பகவதி கோவிலில் விஜயகாந்த் கேரளாவிலுள்ள சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழாவை நடிகர் விஜயகாந்த் தொடங்கிவைத்தார்.இந்தக் கோவிலுக்கு வந்தால் எனது "கொடி உயரும் என்று நண்பர்கள் சொன்னதால் கோவிலுக்கு வந்ததாக விஜயகாந்த்தெரிவித்தார்.நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் பிஸியாக இருக்கிறார். இதற்காக அவரது ரசிகர்கள் வீடு வீடாக சென்றுகட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவரான விஜயகாந்த், அரசியலில் குதிப்பதற்கு முன் கோவில், கோவிலாக சென்று வருகிறார்.இந் நிலையில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோவிலுக்கு விஜயகாந்த் சென்றார். திருவல்லாஅருகே உள்ள நீரேட்டுபுரத்தில் இந்தக் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானபக்தர்கள் செல்வது வழக்கம்.இக் கோவிலை பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். இந் நிலையில்கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் இந்தக் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த், அங்கு நடைபெற்ற கொடிமரம் பிரதிஷ்டைவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதன் பிறகு அவர் கூறுகையில், சாதாரணமாக நான் அடிக்கடி கோவிலுக்கு செல்வது கிடையாது. தினமும் வெளியே செல்லும்போது தாய், தந்தையை வணங்கிவிட்டு செல்வது தான் வழக்கம். இந்தக் கோவிலின் பெருமையை கேள்விப்பட்ட நான், கடந்தஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இங்கு வந்திருக்கிறேன். இந்த விழாவிற்கு கொடியேற்ற செல்கிறேன் என்று எனது நண்பர்களிடம் சொன்னபோது நீ சென்று வா, அதற்குப் பிறகு உனதுகொடி தானே உயரும் என்றனர். என்னை இப்படி அவர்கள் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது என்றார் விஜயகாந்த்.விழாவுக்கு வந்த பக்தர்களும், அம்மனின் அருளால் உங்கள் கொடி உயரும், உங்களால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுவாழ்த்தினார்களாம். கேரள சேட்டன் மற்றும் சேச்சிகளின் வாழ்த்துக்களில் நெகிழ்ந்துபோன விஜயகாந்த், அன்னதானம் திட்டம்துவங்க பகவதி கோயிலுக்கு ரூ. 10,000 நிதியும் வழங்கிவிட்டு திரும்பியுள்ளார்.

கேரள பகவதி கோவிலில் விஜயகாந்த் கேரளாவிலுள்ள சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழாவை நடிகர் விஜயகாந்த் தொடங்கிவைத்தார்.இந்தக் கோவிலுக்கு வந்தால் எனது "கொடி உயரும் என்று நண்பர்கள் சொன்னதால் கோவிலுக்கு வந்ததாக விஜயகாந்த்தெரிவித்தார்.நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் பிஸியாக இருக்கிறார். இதற்காக அவரது ரசிகர்கள் வீடு வீடாக சென்றுகட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவரான விஜயகாந்த், அரசியலில் குதிப்பதற்கு முன் கோவில், கோவிலாக சென்று வருகிறார்.இந் நிலையில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோவிலுக்கு விஜயகாந்த் சென்றார். திருவல்லாஅருகே உள்ள நீரேட்டுபுரத்தில் இந்தக் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானபக்தர்கள் செல்வது வழக்கம்.இக் கோவிலை பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். இந் நிலையில்கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் இந்தக் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த், அங்கு நடைபெற்ற கொடிமரம் பிரதிஷ்டைவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இதன் பிறகு அவர் கூறுகையில், சாதாரணமாக நான் அடிக்கடி கோவிலுக்கு செல்வது கிடையாது. தினமும் வெளியே செல்லும்போது தாய், தந்தையை வணங்கிவிட்டு செல்வது தான் வழக்கம். இந்தக் கோவிலின் பெருமையை கேள்விப்பட்ட நான், கடந்தஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இங்கு வந்திருக்கிறேன். இந்த விழாவிற்கு கொடியேற்ற செல்கிறேன் என்று எனது நண்பர்களிடம் சொன்னபோது நீ சென்று வா, அதற்குப் பிறகு உனதுகொடி தானே உயரும் என்றனர். என்னை இப்படி அவர்கள் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது என்றார் விஜயகாந்த்.விழாவுக்கு வந்த பக்தர்களும், அம்மனின் அருளால் உங்கள் கொடி உயரும், உங்களால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுவாழ்த்தினார்களாம். கேரள சேட்டன் மற்றும் சேச்சிகளின் வாழ்த்துக்களில் நெகிழ்ந்துபோன விஜயகாந்த், அன்னதானம் திட்டம்துவங்க பகவதி கோயிலுக்கு ரூ. 10,000 நிதியும் வழங்கிவிட்டு திரும்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கேரளாவிலுள்ள சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழாவை நடிகர் விஜயகாந்த் தொடங்கிவைத்தார்.

இந்தக் கோவிலுக்கு வந்தால் எனது "கொடி உயரும் என்று நண்பர்கள் சொன்னதால் கோவிலுக்கு வந்ததாக விஜயகாந்த்தெரிவித்தார்.

நடிகர் விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் பிஸியாக இருக்கிறார். இதற்காக அவரது ரசிகர்கள் வீடு வீடாக சென்றுகட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவரான விஜயகாந்த், அரசியலில் குதிப்பதற்கு முன் கோவில், கோவிலாக சென்று வருகிறார்.

இந் நிலையில் கேரளாவிலுள்ள புகழ் பெற்ற சக்குளத்துக் காவு பகவதி அம்மன் கோவிலுக்கு விஜயகாந்த் சென்றார். திருவல்லாஅருகே உள்ள நீரேட்டுபுரத்தில் இந்தக் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானபக்தர்கள் செல்வது வழக்கம்.

இக் கோவிலை பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார். இந் நிலையில்கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் இந்தக் கோவிலுக்கு சென்ற விஜயகாந்த், அங்கு நடைபெற்ற கொடிமரம் பிரதிஷ்டைவிழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதன் பிறகு அவர் கூறுகையில், சாதாரணமாக நான் அடிக்கடி கோவிலுக்கு செல்வது கிடையாது. தினமும் வெளியே செல்லும்போது தாய், தந்தையை வணங்கிவிட்டு செல்வது தான் வழக்கம். இந்தக் கோவிலின் பெருமையை கேள்விப்பட்ட நான், கடந்தஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக இங்கு வந்திருக்கிறேன்.

இந்த விழாவிற்கு கொடியேற்ற செல்கிறேன் என்று எனது நண்பர்களிடம் சொன்னபோது நீ சென்று வா, அதற்குப் பிறகு உனதுகொடி தானே உயரும் என்றனர். என்னை இப்படி அவர்கள் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது என்றார் விஜயகாந்த்.

விழாவுக்கு வந்த பக்தர்களும், அம்மனின் அருளால் உங்கள் கொடி உயரும், உங்களால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றுவாழ்த்தினார்களாம். கேரள சேட்டன் மற்றும் சேச்சிகளின் வாழ்த்துக்களில் நெகிழ்ந்துபோன விஜயகாந்த், அன்னதானம் திட்டம்துவங்க பகவதி கோயிலுக்கு ரூ. 10,000 நிதியும் வழங்கிவிட்டு திரும்பியுள்ளார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil