மீண்டும் விஜய்காந்தை படத்துல பாக்க ரெடியா... அப்டேட் இதோ!

சென்னை : நடிகர் விஜய்காந்த் மக்களை கவரும் வகையில் அதிகமான படங்களை கொடுத்துள்ளார்.

Recommended Video

Captain Vijakanth is BACK | மீண்டும் நடிக்கும் Vijaykanth, Vijayantony, Vijay Milton

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்காந்த்

நடிகர் விஜய்காந்த்

நடிகர் விஜய்காந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர். இவரது தனிப்பட்ட ஆக்ஷன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது ரமணா, தவசி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியலில் இருந்தாலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி தொடர்ந்து படங்களில் நடித்தார்.

மீண்டும் நடிக்கும் விஜய்காந்த்

மீண்டும் நடிக்கும் விஜய்காந்த்

இந்நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பிலிருந்து விலகியுள்ளார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் மீண்டும் விஜய்காந்த் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை படத்தின் இயக்குநர் விஜய் மில்டனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விறுவிறு படப்பிடிப்பு

விறுவிறு படப்பிடிப்பு

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் மேலும் மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். வித்தியாசமான தலைப்புடன் இந்தப் படம் விறுவிறுப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

டையூ டாமனில் படப்பிடிப்பு

டையூ டாமனில் படப்பிடிப்பு

இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தற்போது படக்குழு டையூ டாமனுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் படத்தில் இணைவது குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. விஜய்காந்தால் முன்பு போல ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் அதற்கேற்ப அவரது கேரக்டர் படத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இரு தினங்கள் சூட்டிங்

இரு தினங்கள் சூட்டிங்

அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இரு தினங்களுக்கு மட்டுமே எடுக்கவுள்ளதாகவும், டையூ டாமனில் இருந்து படக்குழு வந்தவுடன் விஜய்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் பெரிய மனிதர் கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளதாக முன்னதாக விஜய் மில்டன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

உடல்நலம் தேறியிருந்தாலும் முன்பு போல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வருகிறார் விஜய்காந்த். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பையும் குஷியையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பதையும் எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X