அதிர்ச்சி.. விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் எம். தியாகராஜன்.. ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்

சென்னை: ஒரு பக்கம் கோடியில் புரளும் சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி தெருக்கோடியில் அநாதையாக சில சினிமா பிரபலங்கள் இறந்து போகும் சோகமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்தின் மாநகர காவல் படத்தை இயக்கிய இயக்குநர் எம். தியாகராஜன் ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக இறந்து கிடந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வறுமையில் வாடி வந்த அவர் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இயக்குநர் பரிதாப மரணம்

இயக்குநர் பரிதாப மரணம்

தமிழ் சினிமா இயக்குநர் எம். தியாகராஜன் இன்று காலை வடபழனியில் உள்ள எவிஎம் ஸ்டூடியோ எதிரே உள்ள தெருவோரமாக பரிதாபமான முறையில் இறந்து கிடந்த சோகம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் பட இயக்குநர்

விஜயகாந்த் பட இயக்குநர்

கேப்டன் விஜயகாந்தின் மாநகர காவல் திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் எம். தியாகராஜன். தமிழ் சினிமாவின் இயக்குநர் ஒருவரின் மரணம் இப்படியொரு பரிதாபமான நிலையிலா நிகழவேண்டும் என ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏவிஎம்மின் 150வது படம்

ஏவிஎம்மின் 150வது படம்

ஏவிஎம் தயாரிப்பில் 150வது படமாக வெளியான விஜயகாந்தின் மாநகர காவல் படத்தை இயக்குநர் எம். தியாகராஜன் இயக்கி உள்ளார். மாநகர காவல் படத்தில் விஜயகாந்த், சுமா, நம்பியார், லக்‌ஷ்மி, நாசர், ஆனந்த் ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் எம். தியாகராஜனுக்கு அதற்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

குடும்பத்தில் சண்டை

குடும்பத்தில் சண்டை

குடும்பத்தினருடன் சண்டை போட்டு பிரிந்து வடபழனியிலேயே வாழ்ந்து வந்த இயக்குநர் எம். தியாகராஜன் அதே ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு எதிரில் உள்ள தெருவோரமாகவே பரிதாபமாக இறந்து கிடந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

ஒரு பக்கம் கோடி கோடியாய் சினிமா பிரபலங்கள் சம்பாதித்து வரும் நிலையில், அதே சினிமாவில் இன்னொரு பக்கம் சில கலைஞர்கள் இப்படி நொடிந்து போய் அநாதைகளை போல மரணிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டே இருப்பதாக கூறி ரசிகர்கள் இயக்குநர் எம். தியாகராஜனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X