விஜயகாந்த் மகனை இயக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர்.. ஷூட்டிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?

சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படைவீரன் எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது சகோதரர் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார்.

Vijayakanth Shanmuga Pandian Ponram

சண்முக பாண்டியனுக்கு நடிகர் விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு உறுதுணையாக இருக்கவும் உடல் இணைந்து நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளனர்.

விஜயகாந்த் மறைவு: பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் என்றும் புரட்சிக் கலைஞர் என்றும் பாராட்டப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அவரது இறுதி ஊர்வலத்துக்கு திரளாக மக்கள் வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக அவரது சமாதிக்கு தினமும் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையிலும், தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பிரேமலதா அன்னதானம் வழங்கி வருகிறார்.

படைவீரன்: விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படைவீரன் படத்தில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் டீசர் ஒன்று வெளியானது. கும்கி படத்தில் விக்ரம் பிரபு யானையுடன் நடித்தது போல இந்தப் படத்தில் விஜயகாந்தின் மகன் யானைகளுடன் நடித்து அசத்தியுள்ளார். விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்ராம் இயக்கத்தில்: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் அடுத்ததாக சண்முக பாண்டியன் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2: சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல, பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தில் கவின் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் தற்போது ஏகப்பட்ட படங்களில் கவின் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X