ரசிகர்களுடன் விஜயகாந்த் பைனல் டச்! புதிய கட்சி தொடர்பாக சென்னையில் தனது ரசிகர்களுடன் இறுதிக் கட்ட ஆலோசனையை நடிகர் விஜயகாந்த்தொடங்கியுள்ளார்.செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநில மாநாட்டின்போது தனது புதிய கட்சி தொடர்பானஅறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். இதுதொடர்பான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.ரசிகர் மன்ற மாநாடு மற்றும் புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மதுரையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் கோவையிலும் நடந்தது. தற்போது இறுதிக் கட்டமாக சென்னையில், வடமாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் இன்று தொடங்கியஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ரசிகர்களின் ஆலோசனைகளை கேட்டு வரும் விஜயகாந்த் மாலையில் அவர்களிடையே உரையாற்றவுள்ளார். அப்போது புதியகட்சி தொடர்பாகவும், கட்சி ஆரம்பித்த பின்னர் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்விரிவாக பேசவுள்ளார்.சென்னை மண்டலத்தைத் தொடர்ந்து மற்ற வட மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார்.
புதிய கட்சி தொடர்பாக சென்னையில் தனது ரசிகர்களுடன் இறுதிக் கட்ட ஆலோசனையை நடிகர் விஜயகாந்த்தொடங்கியுள்ளார்.
செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநில மாநாட்டின்போது தனது புதிய கட்சி தொடர்பானஅறிவிப்பை விஜயகாந்த் வெளியிடவுள்ளார். இதுதொடர்பான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ரசிகர் மன்ற மாநாடு மற்றும் புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.மதுரையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் கோவையிலும் நடந்தது. தற்போது இறுதிக் கட்டமாக சென்னையில், வடமாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் இன்று தொடங்கியஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரசிகர்களின் ஆலோசனைகளை கேட்டு வரும் விஜயகாந்த் மாலையில் அவர்களிடையே உரையாற்றவுள்ளார். அப்போது புதியகட்சி தொடர்பாகவும், கட்சி ஆரம்பித்த பின்னர் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர்விரிவாக பேசவுள்ளார்.
சென்னை மண்டலத்தைத் தொடர்ந்து மற்ற வட மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனும் விஜயகாந்த் ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார்.


Click it and Unblock the Notifications