twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை கடுப்படித்த விஜயகாந்த் விஜயகாந்த்தை சந்திக்க முயற்சித்த ரசிகர்களை அவர் கண்டுகொள்ளாமல் காரில் ஏறிக் கிளம்பி விட்டதால் ஆத்திரமடைந்ததூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள் தாங்கள் கட்டியிருந்த ரசிகர் மன்றக் கரை வேட்டி மற்றும் மன்றக் கொடியை தீயிட்டுக்கொளுத்தினர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அன்றே தனதுபுதிய கட்சியின் பெயரையும் விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் மதுரையில் மும்முரமாக தொடங்கியுள்ளன. கடந்த 2 நாட்களாக மதுரையில் தங்கியிருந்து ரசிகர் மன்றநிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது ரசிகர்களை விஜயகாந்த்சந்திக்கவில்லை. மாறாக நிர்வாகிகளுடன் மட்டுமே அவர் பேசினார்.விஜயகாந்த்தை பார்ப்பதற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டரசிகர்கள் ஏராளமான பேர் ஆலோசனைக் கூட்டம் நடந்த தெப்பக்குளம் பகுதியில் குழுமியிருந்தனர்.ஆனால் அவர்களை, தான் சந்திக்கப் போவதில்லை என்று விஜயகாந்த் கூறியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.இருப்பினும் எப்படியாவது விஜயகாந்த்தை சந்தித்து விடலாம் என்று கருதி பொறுமையாக அவர்கள் கூட்டம் நடந்த திருமணமண்டபத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.இந் நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை திருமண மண்டபத்திற்கு விஜயகாந்த் காரில் வந்தார். அப்போது தூத்துக்குடிமாவட்ட ரசிகர்கள் விஜயகாந்த் கார் முன்பு படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் விஜயகாந்தின் கமாண்டோ படையினர்(தொண்டர் படை!) அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கடாசினர்.கூட்டம் முடிந்து பிற்பகல் விஜயகாந்த் வெளியே வந்தபோதும் இந்த ரசிகர்கள் அவரை சந்திக்க முயற்சித்தனர். ஆனால்அவர்களை கண்டுகொள்ளாத விஜயகாந்த் காரில் ஏறி விருட்டென்று கிளம்பி விட்டார்.இதனால் கொந்தளித்துப் போன ரசிகர்கள் தாங்கள் கட்டியிருந்த ரசிகர் மன்ற கரை வேட்டிகளை உருவி அதற்கு தீவைத்தனர்.அதேபோல மன்றக் கொடியையும் தீயில் போட்டு பொசுக்கினர். பின்னர் விஜயகாந்த்துக்கு எதிராக கோஷமிட்டதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த்தின் போக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ரசிகர் மன்ற செயலாளர் பிரபாகர் கூறுகையில், விஜயகாந்த்தின் ஆரம்பகால ரசிகர்கள் நாங்கள். தொடர்ந்து இன்று வரை அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறோம்.ஆனால் மன்றத்தில் சேர்ந்து சில ஆண்டுகளே ஆனவர்களுக்கும், பண பலம், ஆள்பலம் உள்ளவர்களுக்குமே அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களுக்கே மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன.இன்று ரசிகர்களை சந்திக்கக் கூட விஜயகாந்த் மறுத்துள்ளார். இப்படியே அவர் தொடர்ந்து நடந்து கொண்டால், மாவட்டத்தில்உள்ள 1000க்கும் மேற்பட்ட மன்றங்களை கலைக்க வேண்டி வரும் என்றார்.இதற்கிடையே திருநகர் தோப்பூர் பகுதியில் மாநாடு நடக்கவுள்ள இடத்தில் கால்கோள் விழாவும் புதன்கிழமை நடந்தது. அதில்விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மாநில ரசிகர் மன்றத் தலைவர் ராமு வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டார் விஜயகாந்த்.விஜயகாந்த் ரசிகர்களின் திடீர் போராட்டம் காரணமாக மன்றத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.எம்ஜிஆர் பெயரை கெடுக்கிறார்:இதற்கிடையே எம்.ஜி. தமிழன்பன் என்பவர் எம்.ஜி.ஆர். பெயரை விஜயகாந்த் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார். இவர் அனைத்திந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியின் நிறுவனத் தலைவர்ஆவார்.சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழன்பன் பேசுகையில், எம்.ஜி.ஆரின் பெயரைக் கெடுக்கும் வகையில் விஜயகாந்தசெயல்பட்டு வருகிறார். அவரது பெயரைப் பயன்படுத்தி விஜயகாந்த் கட்சி தொடங்குவதை கடுமையாக எதிர்க்கிறோம்.எம்.ஜி.ஆர் எங்கே, விஜயகாந்த் எங்கே?சினிமா செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் அவருக்கு தனி செல்வாக்கு இருந்தது.அதை வைத்துத் தான் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சினிமா செல்வாக்கை வைத்துக் கொண்டு மக்களைஏமாற்றி அரசியலில் இடம் பிடிக்க விஜயகாந்த் முயற்சிக்கிறார். விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் அவரை கடுமையாக எதிர்ப்போம். அவரது கட்சி போட்டியிடும்வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு அவர்களை தோல்வியடையச் செய்வோம்.எங்களது கட்சியின் முதல் மாநில மாநாடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி மதுரையில் நடைபெறும் என்றார் அவர்.தமிழன்பன், எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம், சத்யா ஸ்டுடியோ ஆகியவற்றில் பணியாற்றியவர். அந்த அனுபவத்தைவைத்து இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். இவரது கட்சியின் கொடியாக கருப்பு, சிவப்பு வண்ணத்தில் நடுவில்இரட்டை மீன் சின்னம் இடம் பெற்றுள்ளது.

    By Staff
    |

    விஜயகாந்த்தை சந்திக்க முயற்சித்த ரசிகர்களை அவர் கண்டுகொள்ளாமல் காரில் ஏறிக் கிளம்பி விட்டதால் ஆத்திரமடைந்ததூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள் தாங்கள் கட்டியிருந்த ரசிகர் மன்றக் கரை வேட்டி மற்றும் மன்றக் கொடியை தீயிட்டுக்கொளுத்தினர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

    விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. அன்றே தனதுபுதிய கட்சியின் பெயரையும் விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.

    இதற்கான ஏற்பாடுகள் மதுரையில் மும்முரமாக தொடங்கியுள்ளன. கடந்த 2 நாட்களாக மதுரையில் தங்கியிருந்து ரசிகர் மன்றநிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது ரசிகர்களை விஜயகாந்த்சந்திக்கவில்லை. மாறாக நிர்வாகிகளுடன் மட்டுமே அவர் பேசினார்.

    விஜயகாந்த்தை பார்ப்பதற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டரசிகர்கள் ஏராளமான பேர் ஆலோசனைக் கூட்டம் நடந்த தெப்பக்குளம் பகுதியில் குழுமியிருந்தனர்.

    ஆனால் அவர்களை, தான் சந்திக்கப் போவதில்லை என்று விஜயகாந்த் கூறியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.இருப்பினும் எப்படியாவது விஜயகாந்த்தை சந்தித்து விடலாம் என்று கருதி பொறுமையாக அவர்கள் கூட்டம் நடந்த திருமணமண்டபத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.

    இந் நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை திருமண மண்டபத்திற்கு விஜயகாந்த் காரில் வந்தார். அப்போது தூத்துக்குடிமாவட்ட ரசிகர்கள் விஜயகாந்த் கார் முன்பு படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் விஜயகாந்தின் கமாண்டோ படையினர்(தொண்டர் படை!) அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கடாசினர்.

    கூட்டம் முடிந்து பிற்பகல் விஜயகாந்த் வெளியே வந்தபோதும் இந்த ரசிகர்கள் அவரை சந்திக்க முயற்சித்தனர். ஆனால்அவர்களை கண்டுகொள்ளாத விஜயகாந்த் காரில் ஏறி விருட்டென்று கிளம்பி விட்டார்.

    இதனால் கொந்தளித்துப் போன ரசிகர்கள் தாங்கள் கட்டியிருந்த ரசிகர் மன்ற கரை வேட்டிகளை உருவி அதற்கு தீவைத்தனர்.அதேபோல மன்றக் கொடியையும் தீயில் போட்டு பொசுக்கினர். பின்னர் விஜயகாந்த்துக்கு எதிராக கோஷமிட்டதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

    விஜயகாந்த்தின் போக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ரசிகர் மன்ற செயலாளர் பிரபாகர் கூறுகையில், விஜயகாந்த்தின் ஆரம்பகால ரசிகர்கள் நாங்கள். தொடர்ந்து இன்று வரை அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறோம்.

    ஆனால் மன்றத்தில் சேர்ந்து சில ஆண்டுகளே ஆனவர்களுக்கும், பண பலம், ஆள்பலம் உள்ளவர்களுக்குமே அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களுக்கே மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன.

    இன்று ரசிகர்களை சந்திக்கக் கூட விஜயகாந்த் மறுத்துள்ளார். இப்படியே அவர் தொடர்ந்து நடந்து கொண்டால், மாவட்டத்தில்உள்ள 1000க்கும் மேற்பட்ட மன்றங்களை கலைக்க வேண்டி வரும் என்றார்.

    இதற்கிடையே திருநகர் தோப்பூர் பகுதியில் மாநாடு நடக்கவுள்ள இடத்தில் கால்கோள் விழாவும் புதன்கிழமை நடந்தது. அதில்விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மாநில ரசிகர் மன்றத் தலைவர் ராமு வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டார் விஜயகாந்த்.

    விஜயகாந்த் ரசிகர்களின் திடீர் போராட்டம் காரணமாக மன்றத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    எம்ஜிஆர் பெயரை கெடுக்கிறார்:

    இதற்கிடையே எம்.ஜி. தமிழன்பன் என்பவர் எம்.ஜி.ஆர். பெயரை விஜயகாந்த் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளார். இவர் அனைத்திந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியின் நிறுவனத் தலைவர்ஆவார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழன்பன் பேசுகையில், எம்.ஜி.ஆரின் பெயரைக் கெடுக்கும் வகையில் விஜயகாந்தசெயல்பட்டு வருகிறார். அவரது பெயரைப் பயன்படுத்தி விஜயகாந்த் கட்சி தொடங்குவதை கடுமையாக எதிர்க்கிறோம்.எம்.ஜி.ஆர் எங்கே, விஜயகாந்த் எங்கே?


    சினிமா செல்வாக்கைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் அவருக்கு தனி செல்வாக்கு இருந்தது.அதை வைத்துத் தான் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சினிமா செல்வாக்கை வைத்துக் கொண்டு மக்களைஏமாற்றி அரசியலில் இடம் பிடிக்க விஜயகாந்த் முயற்சிக்கிறார்.

    விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் அவரை கடுமையாக எதிர்ப்போம். அவரது கட்சி போட்டியிடும்வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு அவர்களை தோல்வியடையச் செய்வோம்.

    எங்களது கட்சியின் முதல் மாநில மாநாடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி மதுரையில் நடைபெறும் என்றார் அவர்.

    தமிழன்பன், எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம், சத்யா ஸ்டுடியோ ஆகியவற்றில் பணியாற்றியவர். அந்த அனுபவத்தைவைத்து இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். இவரது கட்சியின் கொடியாக கருப்பு, சிவப்பு வண்ணத்தில் நடுவில்இரட்டை மீன் சின்னம் இடம் பெற்றுள்ளது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X