»   »  கேப்டன் கட்சியில் ரேவதி, குஷ்பு விஜயகாந்த் கட்சி பிறக்கப் போவது செப்டம்பர் 14ல்தான். ஆனால் அதற்குள் கட்சிக்கு முக்கியப் புள்ளிகளை சேர்க்கும் வேலை மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது.சினிமாப் புள்ளிகளைத் தவிர அரசியல் பிரபலங்கள் பல பேரும் விஜயகாந்த்தின் புதிய கட்சியில் சேர ஆயத்தமாகி வருகிறாரக்ள். முன்னாள், இன்னாள்பிரபலங்கள் பல பேருடைய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஆள் சேர்க்கும் வேலையில் கேப்டனும் அவரது மனைவி பிரேமலதாவும் தீவிரமாககளமிறங்கியுள்ளனர்.கட்சியில் சேர ஒப்புக் கொண்டுள்ள இந்த விஐபிக்கள் மதுரை மாநாட்டில் கேப்டனுடன் மேடையேறி மெம்பர் கார்டை கேப்டன் கையால்வாங்கவுள்ளார்கள்.சினிமாக் கலைஞர்களைப் பொருத்தவரை ஒரு பெரிய பட்டாளமே விஜயகாந்த் பின்னால் அணிவகுக்கரெடியாகி உள்ளார்களாம். மிகப் பெரிய நடிகர்கள் என்று யாரும் இப்போதைக்கு கேப்டன் பின்னால் வரதயாராக இல்லை என்றாலும் தமிழக திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த பலர் விஜயகாந்த்கட்சியில் சேரத் தயாராக உள்ளார்கள்.அந்த வகையில் நமக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கீழ்க்காணும் நடிகர், நடிகைகள் கேப்டன் கட்சியில்முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார்கள். அந்தப் பட்டியல்:நடிகைகள் குஷ்பு, ரேவதி, பானுப்பிரியா, ரம்பா, கனகா, நடிகர்கள் முரளி, அருண்பாண்டியன், மன்சூர்அலிகான், செந்தில், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன்.அதில் மன்சூர் அலிகானை ஒரு விஜய்காந்த் வெறியர் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு கேப்டன் மீதுபெரும் மரியாதையும் அவர் சொன்னால் எதையும் செய்யவும் தயங்காதவர்.இவர்கள் தவிர திமுகவில் உள்ள சந்திரசேகர், தியாகு, அதிமுகவில் உள்ள ராமராஜன், பாண்டியன்,எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி ஆகியோரையும் தன் பக்கம் இழுக்க விஜயகாந்த் முயற்சித்து வருவதாக தெரிகிறது.இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.குஷ்புவும், ரேவதியும் கண்டிப்பாக விஜயகாந்தின் கட்சியில் சேர முன் வந்துவிட்டனர். இந்த இருவருக்குமே மிகமுக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளனவாம். இதில் ரேவதிக்கு மகளிர் அணித் தலைவி பதவிகொடுக்கப்பட்டு ஏதாவது ஒரு போட்டியிடவும் வைக்கப்படுவார் என்கிறார்கள்.முக்குலத்தோர் வாக்குகளை மனதில் வைத்து நடிகர் கார்த்திக்கையும் தனது கட்சியில் சேருமாறு விஜயகாந்த்கேட்டு வருவதாகவும், ஆனால் அவர் பிடி கொடுக்காமல் இருப்பதாகவும் தெரிகிறது.அதேபோல இயக்குனர்கள் ஆர். சுந்தரராஜன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், ராஜ்கபூர்போன்றோரும் விஜயகாந்த் கட்சியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர்கள் தவிர பல முன்னாள் பிரபல அரசியல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்க்க விஜயகாந்த் முயற்சிமேற்கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமி,ராஜாராம் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.இவர்களில் ராஜாராம்தான் கேப்டனின் அரசியல் குருவாக செயல்பட்டு வருகிறார் என்றும் ஒரு பேச்சு ரொம்பநாளாகவே உலவி வருகிறது.வெறும் சினிமாக் கூட்டத்தை மட்டும் பிரதானப்படுத்தாமல், அரசியல் சாயம் இல்லாத முக்கியப் பிரமுகர்கள்சிலரையும் தனது கட்சியில் முக்கிய இடம் கொடுக்க விஜயகாந்த் நினைக்கிறாராம்.இதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அதிகாரவர்க்கத்தினர் சிலரும்கேப்டனின் பட்டியலில் உள்ளார்களாம். அவர்களுடனும் கேப்டன் பேசி வருகிறார்.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாமகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டுத் தனிக்கட்சி ஆரம்பித்து அதுவும் எடுபடாமல் அதிமுக பின்னர் பாஜகவில் போய்ச் சேர்ந்து தற்போது அடையாளம்இல்லாமல் போய் விட்ட பேராசிரியர் தீரனையும் தனது கட்சியில் சேர்க்க விஜயகாந்த் முயற்சித்து வருவதாகத்தெரிகிறது.பாமகவில் இருந்து முக்கிய வன்னியப் பிரமுகர்களுக்கு பதவியோடு போட்டியிட வாய்ப்பும் அளிப்பாராம்விஜய்காந்த்.எனவே, விஜயகாந்த்தின் மதுரை மாநாடும், அரசியல் பிரவேசமும் ரொம்பவே பரபரப்பாக இருப்பப் போவதுமட்டும் நிச்சயம்.

கேப்டன் கட்சியில் ரேவதி, குஷ்பு விஜயகாந்த் கட்சி பிறக்கப் போவது செப்டம்பர் 14ல்தான். ஆனால் அதற்குள் கட்சிக்கு முக்கியப் புள்ளிகளை சேர்க்கும் வேலை மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது.சினிமாப் புள்ளிகளைத் தவிர அரசியல் பிரபலங்கள் பல பேரும் விஜயகாந்த்தின் புதிய கட்சியில் சேர ஆயத்தமாகி வருகிறாரக்ள். முன்னாள், இன்னாள்பிரபலங்கள் பல பேருடைய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஆள் சேர்க்கும் வேலையில் கேப்டனும் அவரது மனைவி பிரேமலதாவும் தீவிரமாககளமிறங்கியுள்ளனர்.கட்சியில் சேர ஒப்புக் கொண்டுள்ள இந்த விஐபிக்கள் மதுரை மாநாட்டில் கேப்டனுடன் மேடையேறி மெம்பர் கார்டை கேப்டன் கையால்வாங்கவுள்ளார்கள்.சினிமாக் கலைஞர்களைப் பொருத்தவரை ஒரு பெரிய பட்டாளமே விஜயகாந்த் பின்னால் அணிவகுக்கரெடியாகி உள்ளார்களாம். மிகப் பெரிய நடிகர்கள் என்று யாரும் இப்போதைக்கு கேப்டன் பின்னால் வரதயாராக இல்லை என்றாலும் தமிழக திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த பலர் விஜயகாந்த்கட்சியில் சேரத் தயாராக உள்ளார்கள்.அந்த வகையில் நமக்குக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கீழ்க்காணும் நடிகர், நடிகைகள் கேப்டன் கட்சியில்முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார்கள். அந்தப் பட்டியல்:நடிகைகள் குஷ்பு, ரேவதி, பானுப்பிரியா, ரம்பா, கனகா, நடிகர்கள் முரளி, அருண்பாண்டியன், மன்சூர்அலிகான், செந்தில், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன்.அதில் மன்சூர் அலிகானை ஒரு விஜய்காந்த் வெறியர் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு கேப்டன் மீதுபெரும் மரியாதையும் அவர் சொன்னால் எதையும் செய்யவும் தயங்காதவர்.இவர்கள் தவிர திமுகவில் உள்ள சந்திரசேகர், தியாகு, அதிமுகவில் உள்ள ராமராஜன், பாண்டியன்,எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி ஆகியோரையும் தன் பக்கம் இழுக்க விஜயகாந்த் முயற்சித்து வருவதாக தெரிகிறது.இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.குஷ்புவும், ரேவதியும் கண்டிப்பாக விஜயகாந்தின் கட்சியில் சேர முன் வந்துவிட்டனர். இந்த இருவருக்குமே மிகமுக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளனவாம். இதில் ரேவதிக்கு மகளிர் அணித் தலைவி பதவிகொடுக்கப்பட்டு ஏதாவது ஒரு போட்டியிடவும் வைக்கப்படுவார் என்கிறார்கள்.முக்குலத்தோர் வாக்குகளை மனதில் வைத்து நடிகர் கார்த்திக்கையும் தனது கட்சியில் சேருமாறு விஜயகாந்த்கேட்டு வருவதாகவும், ஆனால் அவர் பிடி கொடுக்காமல் இருப்பதாகவும் தெரிகிறது.அதேபோல இயக்குனர்கள் ஆர். சுந்தரராஜன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், ராஜ்கபூர்போன்றோரும் விஜயகாந்த் கட்சியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர்கள் தவிர பல முன்னாள் பிரபல அரசியல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்க்க விஜயகாந்த் முயற்சிமேற்கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமி,ராஜாராம் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.இவர்களில் ராஜாராம்தான் கேப்டனின் அரசியல் குருவாக செயல்பட்டு வருகிறார் என்றும் ஒரு பேச்சு ரொம்பநாளாகவே உலவி வருகிறது.வெறும் சினிமாக் கூட்டத்தை மட்டும் பிரதானப்படுத்தாமல், அரசியல் சாயம் இல்லாத முக்கியப் பிரமுகர்கள்சிலரையும் தனது கட்சியில் முக்கிய இடம் கொடுக்க விஜயகாந்த் நினைக்கிறாராம்.இதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அதிகாரவர்க்கத்தினர் சிலரும்கேப்டனின் பட்டியலில் உள்ளார்களாம். அவர்களுடனும் கேப்டன் பேசி வருகிறார்.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாமகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டுத் தனிக்கட்சி ஆரம்பித்து அதுவும் எடுபடாமல் அதிமுக பின்னர் பாஜகவில் போய்ச் சேர்ந்து தற்போது அடையாளம்இல்லாமல் போய் விட்ட பேராசிரியர் தீரனையும் தனது கட்சியில் சேர்க்க விஜயகாந்த் முயற்சித்து வருவதாகத்தெரிகிறது.பாமகவில் இருந்து முக்கிய வன்னியப் பிரமுகர்களுக்கு பதவியோடு போட்டியிட வாய்ப்பும் அளிப்பாராம்விஜய்காந்த்.எனவே, விஜயகாந்த்தின் மதுரை மாநாடும், அரசியல் பிரவேசமும் ரொம்பவே பரபரப்பாக இருப்பப் போவதுமட்டும் நிச்சயம்.

Subscribe to Oneindia Tamil

விஜயகாந்த்தின் கஜேந்திரா படத்தைத் திரையிட பாமக பச்சைக் கொடி காட்டி விட்டதாக அதன் தயாரிப்பாளர்வி.ஏ.துரை கூறியுள்ளார்.

விஜயகாந்த் நடிக்க வி.ஏ.துரை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் கஜேந்திரா. இடையில், பாமகவைவிமர்சித்து விஜயகாந்த் குரல் கொடுக்க, அவர்கள் பதிலுக்கு விஜய்காந்த் ரசிகர்களைத் தாக்க ஆரம்பித்ததோடு,படத்தை திரையிட விட மாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் படம் தயாராகியும், அதை வினியோகஸ்தர்கள் வாங்கிய பின்னரும் வட தமிழகத்தில் பாமகவினருக்குபயந்து தியேட்டர் உரிமையாளர்கள் அதைத் திரையிட மறுத்துவிட்டனர்.

மேலும், மொத்தமாக படப் பெட்டிகளையே தங்களிடம் கொடுத்து விடுமாறும் பாமக தரப்பு துரையைமிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் கஜேந்திரா வருமா, வராதா என்ற பெரிய கேள்விக்குறி எழ, நெறஞ்ச மனசுஎன்ற அடுத்த படத்தில் நடிக்கப் போய்விட்டார் விஜய்காந்த்.

படம் தனது சொந்தத் தயாரிப்பாக இருந்திருந்தால், படம் ரிலீஸ் வரை அரசியல் பேசாமல் இருந்திருந்திருப்பார்,இதை நான் தயாரித்ததால், கஷ்ட-நஷ்டம் குறித்து கவலைப்படாமல் பாமகவினருடன் மோதி பிரச்சனையைஉருவாக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டார் விஜய்காந்த் என்று துரை தரப்பு எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தது.

இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்த துரை தனது பொருட் செலவு, கடன் பிரச்சனைகள்குறித்து எடுத்துச் சொல்ல, படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் பிரச்சனை தர மாட்டோம் என ராமதாஸ்உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் ராமதாஸை அவரது வீட்டிற்கு சென்றுசந்தித்தேன். அப்போது கஜேந்திரா படத்தை திரையிடுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அதற்கு ராமதாஸ், படத்தைத் திரையிடுவதில் பாமக பிரச்சினை செய்யாது என்று உறுதியளித்தார்.படப்பெட்டிகளை கடத்துவது, திரையரங்க ஸ்கிரீன்களை கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் பாமகவினர் ஈடுபடமாட்டார்கள் என்றும், படத்தை பிரச்சினையின்றி வெளியிட உதவுவார்கள் என்றும் ராமதாஸ் உறுதிமொழிஅளித்தார்.

ராமதாஸ் ஒரு சமூக நீதிப் போராளி. என் தரப்பிலிருந்து படத்திற்குப் பிரச்சினை வராது, தைரியமாக ரிலீஸ்செய்யலாம். முடிந்தால், எனது கட்சிக்காரர்களை படம் பார்க்குமாறு அறிவுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறினார்.

இவ்வாறு துரை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்துக்கும், பாமக தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, ரஜினியின் பாபா படம் படு அடிவாங்கியது. இதனால் வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். பின்னர் அந்த நஷ்டத்தை ரஜினிகாந்த்பணம் கொடுத்து ஓரளவு ச செய்தார்.

பாபா படத்திற்குக் கிடைத்த அதே ரிசல்ட் தான் வட மாவட்டங்களில் கஜேந்திராவுக்கும் கிடைக்கும் என்பதால்படத்தை வாங்கினாலும் ரிலீஸ் செய்யாமல் வினியோகஸ்தர்கள் அமைதி காத்தார்கள். மேலும் திரையரங்கஉரிமையாளர்களும் ஒதுங்கினர்.

இப்போது பாமகவின் மிரட்டல் முடிவுக்கு வந்துள்ளதால், கஜேந்திரா விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது.

தனிக்கட்சி: லியாகத் அலி கான்

இந் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி நடிகர் விஜயகாந்த் தனித்துபோட்டியிடுவார் என்று அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான்கூறினார்.

தாராபுரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய லியாகத் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர். வரும்சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் புதிய கட்சி தொடங்குவார். தனித்துப் போட்டியிடுவார். இப்போதே விஜயகாந்த்ரசிகர் மன்றங்கள் ஒரு அரசியல் கட்சி போன்றுதான் செயல்படுகின்றன.

ரஜினி ரசிகர்களையும் நாங்கள் அரவணைத்து செல்வோம். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களைவிட ஆயிரம்மடங்கு வீரத்துடனும், விவேகத்துடனும் விஜயகாந்த் ரசிகர்கள் இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகமக்களின் பேராதரவுடன் விஜயகாந்த் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதி என்றார் லியாகத் அலிகான்கொஞ்சம் கூட சளைக்காமல்.

விஜய்காந்த் பேட்டி:

இதற்கிடையே பழனியில் நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த்,

உடுமலைப்பேட்டையில் நடத்தப்பட்ட ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை.அதை பத்திரிக்கைகள் தான் பெரிதுபடுத்திவிட்டன. ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன் அவ்வளவு தான்.

அரசியல் கட்சி தொடங்கும் சிந்தனையும் இப்போதைக்கு இல்லை. அதைப் பற்றி சிந்திக்கவும்இல்லை.

கஜேந்திரா படத்துக்கு சிக்கல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டேன். படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பதை தயாரிப்பாளர் தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.

அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாலேயே இப்படி குழப்புறீங்களே?.. இந்த ஒரு லாவகம் போதும்கேப்டன்.. அரசியலுக்கு வந்தா நிச்சயம் ஜெயிச்சுருவீங்க !

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil