»   »  தொண்டர் படைக்கு ராணுவப் பயிற்சி! விஜயகாந்த் ஏற்பாடு தனது தொண்டர் படைக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்க நடிகர் விஜயகாந்த் ஏற்பாடுசெய்துள்ளார். நடிகர் விஜயகாந்த் செப்டம்பர் 14ம் தேதி முறைப்படி அரசியலில் குதிக்கிறார். மதுரையில் அன்று நடைபெறும் ரசிகர் மன்றமாநில மாநாட்டின் போது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. புதிய கட்சிக்கான பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரை மாநாட்டின் போது அணிகளுக்கான நிர்வாகிகள்அறிவிக்கப்படுவர். இதற்கிடையே, புதிதாக தொண்டர் படை ஒன்றை விஜயகாந்த் உருவாக்கியுள்ளார். இதில் மாவட்டத்திற்கு 20 பேர் வீதம் மொத்தம் 660 பேர் இடம் பெற்றுள்ளனர். திமுகவில் உள்ள தொண்டர் படையைப் போலகட்டுக்கோப்பான அணியை உருவாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். புதிய கட்சியின் கூட்டங்கள், விஜயகாந்த் கலந்து கொள்ளும் மாநாடு உள்ளிட்டவற்றில் இந்த தொண்டர் படையினர்பாதுகாப்புப் பணியில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக்கொண்டு பயிற்சி அளிக்க விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார். அடுத்த வாரம் சென்னையில் உள்ள ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் பயிற்சி முகாம் தொடங்குகிறது. மேலும்,மதுரை மாநாட்டுக்குப் பிறகு மக்கள் பிரச்சினை ஏதாவது ஒன்றை முன்வைத்து மிகப் பெரும் போராட்டத்தை சென்னையில்நடத்தவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு மதுரை மாநாட்டில் அறிவிக்கப்படுமாம். அதேபோல, விஜயகாந்த் எந்த தொகுதியில்போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிட்டும் என்றும் ரசிகர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு விஜயகாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.பெரும்பாலும் மதுரை அல்லது தென் மாவட்ட தொகுதி ஏதாவது ஒன்றில் போட்டியிடவே விஜயகாந்த் விருப்பம்தெரிவித்துள்ளாராம். மதுரை மாநாட்டின் போது தொண்டர்களைத் திரட்டி மிகப் பெரிய பேரணியை நடத்த விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால் திமுக பாணியில், மாநாடு நடைபெறும் வளாகத்திலேயே மினி பேரணியை நடத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

தொண்டர் படைக்கு ராணுவப் பயிற்சி! விஜயகாந்த் ஏற்பாடு தனது தொண்டர் படைக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்க நடிகர் விஜயகாந்த் ஏற்பாடுசெய்துள்ளார். நடிகர் விஜயகாந்த் செப்டம்பர் 14ம் தேதி முறைப்படி அரசியலில் குதிக்கிறார். மதுரையில் அன்று நடைபெறும் ரசிகர் மன்றமாநில மாநாட்டின் போது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. புதிய கட்சிக்கான பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரை மாநாட்டின் போது அணிகளுக்கான நிர்வாகிகள்அறிவிக்கப்படுவர். இதற்கிடையே, புதிதாக தொண்டர் படை ஒன்றை விஜயகாந்த் உருவாக்கியுள்ளார். இதில் மாவட்டத்திற்கு 20 பேர் வீதம் மொத்தம் 660 பேர் இடம் பெற்றுள்ளனர். திமுகவில் உள்ள தொண்டர் படையைப் போலகட்டுக்கோப்பான அணியை உருவாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். புதிய கட்சியின் கூட்டங்கள், விஜயகாந்த் கலந்து கொள்ளும் மாநாடு உள்ளிட்டவற்றில் இந்த தொண்டர் படையினர்பாதுகாப்புப் பணியில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக்கொண்டு பயிற்சி அளிக்க விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார். அடுத்த வாரம் சென்னையில் உள்ள ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் பயிற்சி முகாம் தொடங்குகிறது. மேலும்,மதுரை மாநாட்டுக்குப் பிறகு மக்கள் பிரச்சினை ஏதாவது ஒன்றை முன்வைத்து மிகப் பெரும் போராட்டத்தை சென்னையில்நடத்தவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு மதுரை மாநாட்டில் அறிவிக்கப்படுமாம். அதேபோல, விஜயகாந்த் எந்த தொகுதியில்போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிட்டும் என்றும் ரசிகர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு விஜயகாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.பெரும்பாலும் மதுரை அல்லது தென் மாவட்ட தொகுதி ஏதாவது ஒன்றில் போட்டியிடவே விஜயகாந்த் விருப்பம்தெரிவித்துள்ளாராம். மதுரை மாநாட்டின் போது தொண்டர்களைத் திரட்டி மிகப் பெரிய பேரணியை நடத்த விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதனால் திமுக பாணியில், மாநாடு நடைபெறும் வளாகத்திலேயே மினி பேரணியை நடத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது தொண்டர் படைக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்க நடிகர் விஜயகாந்த் ஏற்பாடுசெய்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் செப்டம்பர் 14ம் தேதி முறைப்படி அரசியலில் குதிக்கிறார். மதுரையில் அன்று நடைபெறும் ரசிகர் மன்றமாநில மாநாட்டின் போது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன.

புதிய கட்சிக்கான பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரை மாநாட்டின் போது அணிகளுக்கான நிர்வாகிகள்அறிவிக்கப்படுவர். இதற்கிடையே, புதிதாக தொண்டர் படை ஒன்றை விஜயகாந்த் உருவாக்கியுள்ளார்.

இதில் மாவட்டத்திற்கு 20 பேர் வீதம் மொத்தம் 660 பேர் இடம் பெற்றுள்ளனர். திமுகவில் உள்ள தொண்டர் படையைப் போலகட்டுக்கோப்பான அணியை உருவாக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

புதிய கட்சியின் கூட்டங்கள், விஜயகாந்த் கலந்து கொள்ளும் மாநாடு உள்ளிட்டவற்றில் இந்த தொண்டர் படையினர்பாதுகாப்புப் பணியில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக்கொண்டு பயிற்சி அளிக்க விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார்.

அடுத்த வாரம் சென்னையில் உள்ள ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் பயிற்சி முகாம் தொடங்குகிறது. மேலும்,மதுரை மாநாட்டுக்குப் பிறகு மக்கள் பிரச்சினை ஏதாவது ஒன்றை முன்வைத்து மிகப் பெரும் போராட்டத்தை சென்னையில்நடத்தவும் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.


இதுதொடர்பான அறிவிப்பு மதுரை மாநாட்டில் அறிவிக்கப்படுமாம். அதேபோல, விஜயகாந்த் எந்த தொகுதியில்போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிட்டும் என்றும் ரசிகர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு விஜயகாந்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.பெரும்பாலும் மதுரை அல்லது தென் மாவட்ட தொகுதி ஏதாவது ஒன்றில் போட்டியிடவே விஜயகாந்த் விருப்பம்தெரிவித்துள்ளாராம்.

மதுரை மாநாட்டின் போது தொண்டர்களைத் திரட்டி மிகப் பெரிய பேரணியை நடத்த விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இதனால் திமுக பாணியில், மாநாடு நடைபெறும் வளாகத்திலேயே மினி பேரணியை நடத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil