»   »  ரசிகர்கள் தான் எனது பலம்: விஜயகாந்த் மக்களும், ரசிகர்களும் தான் எனது கட்சிக்கு பலம். கூடவே எனது உழைப்பும் தன்னம்பிக்கையும் என்னை அரசியலில் வெற்றிபெறச் செய்யும் என்கிறார் விஜயகாந்த்.அரசியல் கட்சிக்கான வேலைகளில் நடிகர் விஜயகாந்த் மிகவும் மும்முரமாக உள்ளார். இந்த பரபரப்பான நேரத்திலும் அவர்வழக்கம் போல ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை நேற்று வழங்கினார்.இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் முதல் மாநில அரசியல் மாநாடுநடைபெறுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் மாநாட்டுப்பணிகள் முடிவடைந்து விடும்.4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல் போடப்படும். இதில் 3 லட்சம் பேர் அமரலாம். மாநாட்டையொட்டி ஊர்வலம் நடத்தபோலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் மாநாட்டுப் பந்தலிலேயே பேரணி நடத்தப்படும்.போராட்டம் நடத்தித் தான் எனது சக்தியைக் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாலை மறியல் மற்றும்போராட்டங்களை நடத்துவதால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். மறியல் போராட்டம் நடத்தி 100 பேர் கைதாவார்கள். அவர்களை பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்வார்கள். மாலையில்அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். நான் கூட அப்படி போராட்டம் நடத்த வேண்டுமா?அதெல்லாம் போராட்டேமே அல்ல. புதிய அணுகுமுறையில் மக்களை சந்திக்க வேண்டும். எதிலுமே புதிய அணுகுமுறைதேவை.வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன். தனித்து தான் எனது கட்சிபோட்டியிடும்.எனது கட்சிக்கு பலம் என் ரசிகர்களும், மக்களும் தான். எனது உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் பலம். மக்களின்அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் எங்கள் கொள்கை ஆகும் என்றார் விஜயகாந்த்.

ரசிகர்கள் தான் எனது பலம்: விஜயகாந்த் மக்களும், ரசிகர்களும் தான் எனது கட்சிக்கு பலம். கூடவே எனது உழைப்பும் தன்னம்பிக்கையும் என்னை அரசியலில் வெற்றிபெறச் செய்யும் என்கிறார் விஜயகாந்த்.அரசியல் கட்சிக்கான வேலைகளில் நடிகர் விஜயகாந்த் மிகவும் மும்முரமாக உள்ளார். இந்த பரபரப்பான நேரத்திலும் அவர்வழக்கம் போல ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை நேற்று வழங்கினார்.இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் முதல் மாநில அரசியல் மாநாடுநடைபெறுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் மாநாட்டுப்பணிகள் முடிவடைந்து விடும்.4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல் போடப்படும். இதில் 3 லட்சம் பேர் அமரலாம். மாநாட்டையொட்டி ஊர்வலம் நடத்தபோலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் மாநாட்டுப் பந்தலிலேயே பேரணி நடத்தப்படும்.போராட்டம் நடத்தித் தான் எனது சக்தியைக் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாலை மறியல் மற்றும்போராட்டங்களை நடத்துவதால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். மறியல் போராட்டம் நடத்தி 100 பேர் கைதாவார்கள். அவர்களை பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்வார்கள். மாலையில்அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். நான் கூட அப்படி போராட்டம் நடத்த வேண்டுமா?அதெல்லாம் போராட்டேமே அல்ல. புதிய அணுகுமுறையில் மக்களை சந்திக்க வேண்டும். எதிலுமே புதிய அணுகுமுறைதேவை.வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன். தனித்து தான் எனது கட்சிபோட்டியிடும்.எனது கட்சிக்கு பலம் என் ரசிகர்களும், மக்களும் தான். எனது உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் பலம். மக்களின்அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் எங்கள் கொள்கை ஆகும் என்றார் விஜயகாந்த்.

Subscribe to Oneindia Tamil

மக்களும், ரசிகர்களும் தான் எனது கட்சிக்கு பலம். கூடவே எனது உழைப்பும் தன்னம்பிக்கையும் என்னை அரசியலில் வெற்றிபெறச் செய்யும் என்கிறார் விஜயகாந்த்.

அரசியல் கட்சிக்கான வேலைகளில் நடிகர் விஜயகாந்த் மிகவும் மும்முரமாக உள்ளார். இந்த பரபரப்பான நேரத்திலும் அவர்வழக்கம் போல ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை நேற்று வழங்கினார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் முதல் மாநில அரசியல் மாநாடுநடைபெறுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் மாநாட்டுப்பணிகள் முடிவடைந்து விடும்.


4 லட்சம் சதுர அடி பரப்பளவில் பந்தல் போடப்படும். இதில் 3 லட்சம் பேர் அமரலாம். மாநாட்டையொட்டி ஊர்வலம் நடத்தபோலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் மாநாட்டுப் பந்தலிலேயே பேரணி நடத்தப்படும்.

போராட்டம் நடத்தித் தான் எனது சக்தியைக் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாலை மறியல் மற்றும்போராட்டங்களை நடத்துவதால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள்.

மறியல் போராட்டம் நடத்தி 100 பேர் கைதாவார்கள். அவர்களை பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்வார்கள். மாலையில்அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். நான் கூட அப்படி போராட்டம் நடத்த வேண்டுமா?

அதெல்லாம் போராட்டேமே அல்ல. புதிய அணுகுமுறையில் மக்களை சந்திக்க வேண்டும். எதிலுமே புதிய அணுகுமுறைதேவை.

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன். தனித்து தான் எனது கட்சிபோட்டியிடும்.

எனது கட்சிக்கு பலம் என் ரசிகர்களும், மக்களும் தான். எனது உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் பலம். மக்களின்அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் எங்கள் கொள்கை ஆகும் என்றார் விஜயகாந்த்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil