twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயகாந்தின் "கருப்புப் படையை கண்காணிக்கும் போலீஸ் நடிகர் விஜயகாந்தின் தொண்டர் படையை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுப் பணிகளில் நடிகர் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுமார்3 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு வருகிறது. மாநாட்டுப் பந்தலிலேயே பேரணியும் நடத்ததிட்டமிட்டுள்ளார்.தனது மன்றத்தில் வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மாணவரணி, நெசவாளர் அணி, விவசாயிகள் அணி, தொழிலாளர்அணி, இலக்கிய அணி என ஒரு பக்கா அரசியல் கட்சியில் இருப்பது போன்று அனைத்து அணிகளையும் விஜயகாந்த்உருவாக்கியுள்ளார்.இந்த அணிகளுக்கு தனித்தனி சீருடையும், பல்வேறு விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்குஅடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.விஜயகாந்தின் இந்த அணிகளை விட இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது தொண்டர் படை தான். தனதுகட்சிக்கு திமுகவில் இருப்பதை விட உறுதியான தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே விஜயகாந்த்திட்டமிட்டிருந்தார்.இதன்படி பக்காவான ஒரு தொண்டர் படையை அவர் உருவாக்கி வருகிறார். இந்தப் படையிலுள்ளவர்களுக்கு கருப்பு பேண்ட்,அதே நிறத்தில் சட்டை,தொப்பி, ஷூ என எல்லாமே கருப்பு தான்.ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸைப் போல தலைமுடியை ஒட்ட வெட்டி, தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இந்த தொண்டர் படைக்கு உண்டு.கருப்புப் படை என்று அழைக்கப்படும் இந்த தொண்டர் படையில் இரு பிரிவுகள் இருக்கிறது. ஒரு பிரிவு கூட்டத்தைக்கட்டுப்படுத்துதல், வரிசைப் படுத்துதல், தொண்டர்களுக்கு அவசர காலத்தில் உதவுதல் உட்பட சமூக சேவைப் பணிகளிலும்,இன்னொரு பிரிவு விஜயகாந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில்ஈடுபடும்.இந்த தொண்டர் படையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுப் பணியில் 600க்கும்மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவர்களுக்கு ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியின் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.விஜயகாந்தின் இந்த கருப்புப் படையின் செயல்பாடுகளை தமிழக போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருவதாககூறப்படுகிறது.

    By Staff
    |

    நடிகர் விஜயகாந்தின் தொண்டர் படையை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுப் பணிகளில் நடிகர் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுமார்3 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு வருகிறது. மாநாட்டுப் பந்தலிலேயே பேரணியும் நடத்ததிட்டமிட்டுள்ளார்.

    தனது மன்றத்தில் வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மாணவரணி, நெசவாளர் அணி, விவசாயிகள் அணி, தொழிலாளர்அணி, இலக்கிய அணி என ஒரு பக்கா அரசியல் கட்சியில் இருப்பது போன்று அனைத்து அணிகளையும் விஜயகாந்த்உருவாக்கியுள்ளார்.

    இந்த அணிகளுக்கு தனித்தனி சீருடையும், பல்வேறு விதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்குஅடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

    விஜயகாந்தின் இந்த அணிகளை விட இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பது தொண்டர் படை தான். தனதுகட்சிக்கு திமுகவில் இருப்பதை விட உறுதியான தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே விஜயகாந்த்திட்டமிட்டிருந்தார்.

    இதன்படி பக்காவான ஒரு தொண்டர் படையை அவர் உருவாக்கி வருகிறார். இந்தப் படையிலுள்ளவர்களுக்கு கருப்பு பேண்ட்,அதே நிறத்தில் சட்டை,தொப்பி, ஷூ என எல்லாமே கருப்பு தான்.

    ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸைப் போல தலைமுடியை ஒட்ட வெட்டி, தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என பல விதிமுறைகள் இந்த தொண்டர் படைக்கு உண்டு.


    கருப்புப் படை என்று அழைக்கப்படும் இந்த தொண்டர் படையில் இரு பிரிவுகள் இருக்கிறது. ஒரு பிரிவு கூட்டத்தைக்கட்டுப்படுத்துதல், வரிசைப் படுத்துதல், தொண்டர்களுக்கு அவசர காலத்தில் உதவுதல் உட்பட சமூக சேவைப் பணிகளிலும்,

    இன்னொரு பிரிவு விஜயகாந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில்ஈடுபடும்.

    இந்த தொண்டர் படையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுப் பணியில் 600க்கும்மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இவர்களுக்கு ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியின் மூலம் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    விஜயகாந்தின் இந்த கருப்புப் படையின் செயல்பாடுகளை தமிழக போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருவதாககூறப்படுகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X