»   »  வீடு வீடாக அழைப்பு: விஜயகாந்த் ரசிகர்கள் மும்முரம் மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநாடு மற்றும் அரசியல் கட்சி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை சென்னைநகரில் வீடு வீடாக சென்று விஜயகாந்த் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி ரசிகர் மன்ற மாநாட்டையும், புதிய அரசியல் கட்சி தொடக்க விழாவையும் நடத்துகிறார்விஜயகாந்த். இதற்கான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு சுவர் விடாமல்விளம்பரம் எழுதி வருகிறார்கள். இதுதொடர்பாக காரைக்குடியில் திமுகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே மோதலும் மூண்டுள்ளது. பக்காஅரசியல்வாதிகள் போல நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என கலக்கிவருகின்றனர். இன்னும் வித்தியாசமாக, பொதுமக்களிடம் ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வருமாறு கூறி வீடு வீடாக சென்று அழைப்பிதழையும்விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். திருமண விழா அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ்சென்னையிலிருந்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து விழாவுக்கு வர கோரிக்கை விடுக்க வேண்டும் என்று மன்றத்தலைமை, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அழைப்பிதழை விநியோகம் செய்யும் பணியில் ரசிகர்கள்மும்முரமாக இறங்கியுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றசெயலாளர் இரா.வேணு தலைமையில் ரசிகர்கள் வேட்டி, சட்டையில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து,கண்டிப்பாக மதுரை விழாவுக்கு குடும்பத்தோடு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். விஜயகாந்த் ரசிகர்களின் இந்த புதுமையான அழைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவங்க பாட்டுக்குமாநாட்டை நடத்தாமல் நம்மையும் கூப்பிடுகிறார்களே என்று குஷியாகும் பொதுமக்கள், வந்துர்றோம் என்று கூறி பதிலுக்குரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

வீடு வீடாக அழைப்பு: விஜயகாந்த் ரசிகர்கள் மும்முரம் மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநாடு மற்றும் அரசியல் கட்சி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை சென்னைநகரில் வீடு வீடாக சென்று விஜயகாந்த் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி ரசிகர் மன்ற மாநாட்டையும், புதிய அரசியல் கட்சி தொடக்க விழாவையும் நடத்துகிறார்விஜயகாந்த். இதற்கான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு சுவர் விடாமல்விளம்பரம் எழுதி வருகிறார்கள். இதுதொடர்பாக காரைக்குடியில் திமுகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே மோதலும் மூண்டுள்ளது. பக்காஅரசியல்வாதிகள் போல நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என கலக்கிவருகின்றனர். இன்னும் வித்தியாசமாக, பொதுமக்களிடம் ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வருமாறு கூறி வீடு வீடாக சென்று அழைப்பிதழையும்விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். திருமண விழா அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ்சென்னையிலிருந்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து விழாவுக்கு வர கோரிக்கை விடுக்க வேண்டும் என்று மன்றத்தலைமை, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அழைப்பிதழை விநியோகம் செய்யும் பணியில் ரசிகர்கள்மும்முரமாக இறங்கியுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றசெயலாளர் இரா.வேணு தலைமையில் ரசிகர்கள் வேட்டி, சட்டையில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து,கண்டிப்பாக மதுரை விழாவுக்கு குடும்பத்தோடு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். விஜயகாந்த் ரசிகர்களின் இந்த புதுமையான அழைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவங்க பாட்டுக்குமாநாட்டை நடத்தாமல் நம்மையும் கூப்பிடுகிறார்களே என்று குஷியாகும் பொதுமக்கள், வந்துர்றோம் என்று கூறி பதிலுக்குரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

மதுரையில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநாடு மற்றும் அரசியல் கட்சி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை சென்னைநகரில் வீடு வீடாக சென்று விஜயகாந்த் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி ரசிகர் மன்ற மாநாட்டையும், புதிய அரசியல் கட்சி தொடக்க விழாவையும் நடத்துகிறார்விஜயகாந்த். இதற்கான ஏற்பாடுகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு சுவர் விடாமல்விளம்பரம் எழுதி வருகிறார்கள்.

இதுதொடர்பாக காரைக்குடியில் திமுகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே மோதலும் மூண்டுள்ளது. பக்காஅரசியல்வாதிகள் போல நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என கலக்கிவருகின்றனர்.

இன்னும் வித்தியாசமாக, பொதுமக்களிடம் ரசிகர் மன்ற மாநாட்டுக்கு வருமாறு கூறி வீடு வீடாக சென்று அழைப்பிதழையும்விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். திருமண விழா அழைப்பிதழ் போல அச்சடிக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ்சென்னையிலிருந்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இவற்றை வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து விழாவுக்கு வர கோரிக்கை விடுக்க வேண்டும் என்று மன்றத்தலைமை, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அழைப்பிதழை விநியோகம் செய்யும் பணியில் ரசிகர்கள்மும்முரமாக இறங்கியுள்ளனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றசெயலாளர் இரா.வேணு தலைமையில் ரசிகர்கள் வேட்டி, சட்டையில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொடுத்து,கண்டிப்பாக மதுரை விழாவுக்கு குடும்பத்தோடு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

விஜயகாந்த் ரசிகர்களின் இந்த புதுமையான அழைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவங்க பாட்டுக்குமாநாட்டை நடத்தாமல் நம்மையும் கூப்பிடுகிறார்களே என்று குஷியாகும் பொதுமக்கள், வந்துர்றோம் என்று கூறி பதிலுக்குரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil