»   »  என் கட்சி சுதந்திரமாக செயல்படும்: விஜய்காந்த் நான் ஆரம்பிக்கப் போகும் கட்சி யாருக்கும் போட்டியானது அல்ல, அதே நேரத்தில் எனது கட்சியை வேறு யாராலும்கட்டுப்படுத்தவும் முடியாது என விஜய்காந்த் கூறினார்.மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,எனது கட்சி சுயமாக செயல்படும், சுதந்திரமாக செயல்படும். அடுத்த கட்சியை குறை சொல்வது, மற்றவர்களை விமர்சிப்பதுபோன்ற வேலைகளை எனது கட்சி செய்யாது. ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளை மட்டுமே செய்யும்.வரும் செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் எனது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும். மதுரை ஒரு புனிதபூமியாகும். அங்கு கட்சியைத் தொடங்கும் எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்கும்.தமிழகத்தின் முக்கியஸ்தர்களை நானே தனிப்பட்ட முறையில் சந்தித்து எனது கட்சியின் மாநாட்டுக்கு அழைக்கவுள்ளேன். நான்கட்சி நடத்தும்போது பிற கட்சிகளுடன் நட்பாகவும், சகோதரத்துவத்துடனும் இருக்கவே ஆசைப்படுகிறேன்.மாநாட்டுக்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் இந்தக் கட்டணத்தைஅறிவித்து இருக்கிறோம். கட்சியின் பெயர் மதுரை மாநாட்டில் வெளியிடப்படும்.நடிகர் கார்த்திக் கட்சி ஆரம்பிப்பது குறித்து நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றார் விஜய்காந்த்.

என் கட்சி சுதந்திரமாக செயல்படும்: விஜய்காந்த் நான் ஆரம்பிக்கப் போகும் கட்சி யாருக்கும் போட்டியானது அல்ல, அதே நேரத்தில் எனது கட்சியை வேறு யாராலும்கட்டுப்படுத்தவும் முடியாது என விஜய்காந்த் கூறினார்.மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,எனது கட்சி சுயமாக செயல்படும், சுதந்திரமாக செயல்படும். அடுத்த கட்சியை குறை சொல்வது, மற்றவர்களை விமர்சிப்பதுபோன்ற வேலைகளை எனது கட்சி செய்யாது. ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளை மட்டுமே செய்யும்.வரும் செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் எனது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும். மதுரை ஒரு புனிதபூமியாகும். அங்கு கட்சியைத் தொடங்கும் எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்கும்.தமிழகத்தின் முக்கியஸ்தர்களை நானே தனிப்பட்ட முறையில் சந்தித்து எனது கட்சியின் மாநாட்டுக்கு அழைக்கவுள்ளேன். நான்கட்சி நடத்தும்போது பிற கட்சிகளுடன் நட்பாகவும், சகோதரத்துவத்துடனும் இருக்கவே ஆசைப்படுகிறேன்.மாநாட்டுக்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் இந்தக் கட்டணத்தைஅறிவித்து இருக்கிறோம். கட்சியின் பெயர் மதுரை மாநாட்டில் வெளியிடப்படும்.நடிகர் கார்த்திக் கட்சி ஆரம்பிப்பது குறித்து நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றார் விஜய்காந்த்.

Subscribe to Oneindia Tamil

நான் ஆரம்பிக்கப் போகும் கட்சி யாருக்கும் போட்டியானது அல்ல, அதே நேரத்தில் எனது கட்சியை வேறு யாராலும்கட்டுப்படுத்தவும் முடியாது என விஜய்காந்த் கூறினார்.

மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

எனது கட்சி சுயமாக செயல்படும், சுதந்திரமாக செயல்படும். அடுத்த கட்சியை குறை சொல்வது, மற்றவர்களை விமர்சிப்பதுபோன்ற வேலைகளை எனது கட்சி செய்யாது. ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளை மட்டுமே செய்யும்.

வரும் செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் எனது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும். மதுரை ஒரு புனிதபூமியாகும். அங்கு கட்சியைத் தொடங்கும் எல்லோருக்கும் வெற்றி தான் கிடைக்கும்.

தமிழகத்தின் முக்கியஸ்தர்களை நானே தனிப்பட்ட முறையில் சந்தித்து எனது கட்சியின் மாநாட்டுக்கு அழைக்கவுள்ளேன். நான்கட்சி நடத்தும்போது பிற கட்சிகளுடன் நட்பாகவும், சகோதரத்துவத்துடனும் இருக்கவே ஆசைப்படுகிறேன்.

மாநாட்டுக்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் இந்தக் கட்டணத்தைஅறிவித்து இருக்கிறோம். கட்சியின் பெயர் மதுரை மாநாட்டில் வெளியிடப்படும்.

நடிகர் கார்த்திக் கட்சி ஆரம்பிப்பது குறித்து நான் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்றார் விஜய்காந்த்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil