»   »  எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.. விஜயகாந்த் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் யாரையும் நாட மாட்டேன். யாராவது கூட்டணி வைக்க வந்தால் வரவேற்பேன் என்றுகூறியுள்ளார் நடிகர் விஜயகாந்த்.விஜயகாந்த்துக்கு நாளை (25ம் தேதி) பிறந்த நாளாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் அவர் பிறந்த நாளைக்கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக ரூ. 15 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.இதற்கான விழா சென்னையில் நடந்தது.அதில் விஜயகாந்த் பேசுகையில், மதுரை மாநாடு தொடர்பான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 75 சதவீதபணிகள் முடிந்துள்ளன.கட்சியின் பெயரை இன்னும் இறுதி செய்யவில்லை. பெயரை நான்தான் இறுதி செய்வேன். மாநாடு முடிந்ததும் முதல் வேளையாகசெப்டம்பர் 15ம் தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பேன்.காமராஜர், அண்ணாவின் பெயரையும், படங்களையும் நாங்கள் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை, அதை யாரும்தடுக்கவும் முடியாது.காந்தி,நேரு படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உள்ளபோது, காமராஜர், அண்ணா படங்களைநாங்கள் பயன்படுத்துவதை எப்படித் தப்பாகக் கூற முடியும்?வாழ்க்கையில் எதிலுமே நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சட்டசபைத் தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை.எந்தக் கட்சியுடனும் நான் கூட்டணி வைப்பது குறித்துப் பேச மாட்டேன். அவர்களாக வந்தால் வரவேற்பேன், நானாகயாரிடமும் போக மாட்டேன் என்றார் விஜயகாந்த்.மகன்.. நண்பன்.. சகோதரன்:முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மகனாகவும் சகோதரனாகவும் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்மக்களுக்கும் தாய்மார்களுக்கும், நான் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருக்கும் என் உயிரினும் மேலான ரசிகர்மன்றத்தினக்கும் என் வணக்கங்கள்.நல்லவர்கள்.. வல்லவர்கள்:நாளை என் பிறந்த நாள். என் தமிழ் மக்களுக்காக தொண்டு செய்ய பிறந்தததை நினைத்து பெருமைப்படும் நாள். ஏழைகளுக்குஉதவ என் ரசிகர்கள் சபதம் எடுக்கும் நாள்.தமிழர்கள் நல்லவர்கள். சாதி, மதம் என்ற புரையோடிப்போன புற்றின் வீரியம் அறியாதவர்கள். நல்லவர்களை மதிப்பவர்கள்,வல்லவர்களை போற்றுபவர்கள். என் கலையுலக வாழ்வை உயர்த்தியவர்கள்.சபதம்.. சபதம்..:தமிழ் சமுதாயத்தில் உள்ள அராஜகத்தை அழிக்க வாள் முனையாக மாறியவர்கள் என் ரசிகர்கள். புரட்சி தீபம் ஏந்தி புதியஅரசியல் சரித்திரம் படைக்க உள்ளவர்கள்.தமிழகத்தின் முலை முடுக்குகளில் உள்ள மக்களின் பிரச்சனைகளை நாட்டின் மானப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தொண்டுசெய்ய இந்த நாளில் சபதம் ஏற்கிறேன்.எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.முன்னதாக மதுரையில் விஜய்காந்த் மனைவி பிரேமலதாவுடன் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார்.அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கார்த்திக்கை எனக்கு போட்டியாக கூறுவதை நான் ஏற்க மாட்டேன். அவரைக்கண்டு நான் பயப்படவும் இல்லை. கார்த்திக் கூறியது போல மதுரை ஒரு புண்ணிய பூமி. இங்கு யார் வேண்டுமானாலும் மாநாடுநடத்தலாம், அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்றார்.

எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.. விஜயகாந்த் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் யாரையும் நாட மாட்டேன். யாராவது கூட்டணி வைக்க வந்தால் வரவேற்பேன் என்றுகூறியுள்ளார் நடிகர் விஜயகாந்த்.விஜயகாந்த்துக்கு நாளை (25ம் தேதி) பிறந்த நாளாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் அவர் பிறந்த நாளைக்கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக ரூ. 15 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.இதற்கான விழா சென்னையில் நடந்தது.அதில் விஜயகாந்த் பேசுகையில், மதுரை மாநாடு தொடர்பான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 75 சதவீதபணிகள் முடிந்துள்ளன.கட்சியின் பெயரை இன்னும் இறுதி செய்யவில்லை. பெயரை நான்தான் இறுதி செய்வேன். மாநாடு முடிந்ததும் முதல் வேளையாகசெப்டம்பர் 15ம் தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பேன்.காமராஜர், அண்ணாவின் பெயரையும், படங்களையும் நாங்கள் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை, அதை யாரும்தடுக்கவும் முடியாது.காந்தி,நேரு படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உள்ளபோது, காமராஜர், அண்ணா படங்களைநாங்கள் பயன்படுத்துவதை எப்படித் தப்பாகக் கூற முடியும்?வாழ்க்கையில் எதிலுமே நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சட்டசபைத் தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை.எந்தக் கட்சியுடனும் நான் கூட்டணி வைப்பது குறித்துப் பேச மாட்டேன். அவர்களாக வந்தால் வரவேற்பேன், நானாகயாரிடமும் போக மாட்டேன் என்றார் விஜயகாந்த்.மகன்.. நண்பன்.. சகோதரன்:முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மகனாகவும் சகோதரனாகவும் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்மக்களுக்கும் தாய்மார்களுக்கும், நான் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருக்கும் என் உயிரினும் மேலான ரசிகர்மன்றத்தினக்கும் என் வணக்கங்கள்.நல்லவர்கள்.. வல்லவர்கள்:நாளை என் பிறந்த நாள். என் தமிழ் மக்களுக்காக தொண்டு செய்ய பிறந்தததை நினைத்து பெருமைப்படும் நாள். ஏழைகளுக்குஉதவ என் ரசிகர்கள் சபதம் எடுக்கும் நாள்.தமிழர்கள் நல்லவர்கள். சாதி, மதம் என்ற புரையோடிப்போன புற்றின் வீரியம் அறியாதவர்கள். நல்லவர்களை மதிப்பவர்கள்,வல்லவர்களை போற்றுபவர்கள். என் கலையுலக வாழ்வை உயர்த்தியவர்கள்.சபதம்.. சபதம்..:தமிழ் சமுதாயத்தில் உள்ள அராஜகத்தை அழிக்க வாள் முனையாக மாறியவர்கள் என் ரசிகர்கள். புரட்சி தீபம் ஏந்தி புதியஅரசியல் சரித்திரம் படைக்க உள்ளவர்கள்.தமிழகத்தின் முலை முடுக்குகளில் உள்ள மக்களின் பிரச்சனைகளை நாட்டின் மானப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தொண்டுசெய்ய இந்த நாளில் சபதம் ஏற்கிறேன்.எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.முன்னதாக மதுரையில் விஜய்காந்த் மனைவி பிரேமலதாவுடன் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார்.அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கார்த்திக்கை எனக்கு போட்டியாக கூறுவதை நான் ஏற்க மாட்டேன். அவரைக்கண்டு நான் பயப்படவும் இல்லை. கார்த்திக் கூறியது போல மதுரை ஒரு புண்ணிய பூமி. இங்கு யார் வேண்டுமானாலும் மாநாடுநடத்தலாம், அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்றார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் யாரையும் நாட மாட்டேன். யாராவது கூட்டணி வைக்க வந்தால் வரவேற்பேன் என்றுகூறியுள்ளார் நடிகர் விஜயகாந்த்.

விஜயகாந்த்துக்கு நாளை (25ம் தேதி) பிறந்த நாளாகும். வழக்கம்போல இந்த ஆண்டும் அவர் பிறந்த நாளைக்கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக ரூ. 15 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.இதற்கான விழா சென்னையில் நடந்தது.

அதில் விஜயகாந்த் பேசுகையில், மதுரை மாநாடு தொடர்பான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 75 சதவீதபணிகள் முடிந்துள்ளன.

கட்சியின் பெயரை இன்னும் இறுதி செய்யவில்லை. பெயரை நான்தான் இறுதி செய்வேன். மாநாடு முடிந்ததும் முதல் வேளையாகசெப்டம்பர் 15ம் தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பேன்.

காமராஜர், அண்ணாவின் பெயரையும், படங்களையும் நாங்கள் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை, அதை யாரும்தடுக்கவும் முடியாது.

காந்தி,நேரு படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உள்ளபோது, காமராஜர், அண்ணா படங்களைநாங்கள் பயன்படுத்துவதை எப்படித் தப்பாகக் கூற முடியும்?

வாழ்க்கையில் எதிலுமே நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சட்டசபைத் தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை.

எந்தக் கட்சியுடனும் நான் கூட்டணி வைப்பது குறித்துப் பேச மாட்டேன். அவர்களாக வந்தால் வரவேற்பேன், நானாகயாரிடமும் போக மாட்டேன் என்றார் விஜயகாந்த்.

மகன்.. நண்பன்.. சகோதரன்:

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மகனாகவும் சகோதரனாகவும் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்மக்களுக்கும் தாய்மார்களுக்கும், நான் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருக்கும் என் உயிரினும் மேலான ரசிகர்மன்றத்தினக்கும் என் வணக்கங்கள்.

நல்லவர்கள்.. வல்லவர்கள்:


நாளை என் பிறந்த நாள். என் தமிழ் மக்களுக்காக தொண்டு செய்ய பிறந்தததை நினைத்து பெருமைப்படும் நாள். ஏழைகளுக்குஉதவ என் ரசிகர்கள் சபதம் எடுக்கும் நாள்.

தமிழர்கள் நல்லவர்கள். சாதி, மதம் என்ற புரையோடிப்போன புற்றின் வீரியம் அறியாதவர்கள். நல்லவர்களை மதிப்பவர்கள்,வல்லவர்களை போற்றுபவர்கள். என் கலையுலக வாழ்வை உயர்த்தியவர்கள்.

சபதம்.. சபதம்..:

தமிழ் சமுதாயத்தில் உள்ள அராஜகத்தை அழிக்க வாள் முனையாக மாறியவர்கள் என் ரசிகர்கள். புரட்சி தீபம் ஏந்தி புதியஅரசியல் சரித்திரம் படைக்க உள்ளவர்கள்.

தமிழகத்தின் முலை முடுக்குகளில் உள்ள மக்களின் பிரச்சனைகளை நாட்டின் மானப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தொண்டுசெய்ய இந்த நாளில் சபதம் ஏற்கிறேன்.

எல்லோருக்கும் வேலைவாய்ப்பு, ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

முன்னதாக மதுரையில் விஜய்காந்த் மனைவி பிரேமலதாவுடன் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கார்த்திக்கை எனக்கு போட்டியாக கூறுவதை நான் ஏற்க மாட்டேன். அவரைக்கண்டு நான் பயப்படவும் இல்லை. கார்த்திக் கூறியது போல மதுரை ஒரு புண்ணிய பூமி. இங்கு யார் வேண்டுமானாலும் மாநாடுநடத்தலாம், அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil