»   »  ஆரம்பிச்சுட்டாரு, விஜயகாந்த் ஆரம்பிச்சுட்டாரு தேசிய திராவிட முற்போக்கு கழகம் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் மக்களின் வீடு தேடிச் செல்லும் என்று அக் கட்சியின்தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.எம்.ஜ.ஆர். பிறந்த நாளையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு இன்று விஜயகாந்த் தனது கட்சிநிர்வாகிகளோடு சென்றார். (திடீர்னு எம்ஜிஆர் நினைவுக்கு வந்துட்டார்) அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு விஜயகாந்த் மாலைஅணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கும், எனது கட்சிக்கும் மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பை இங்குகூறுவதை விட நீங்களே என்னுடன் நேரில் வந்து பார்த்தால் நிதர்சனமாக தெரிந்து கொள்ள முடியும்.எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களைத் தேடி மக்கள்அலைய வேண்டியிருக்காது. அவை மக்களைத் தேடி, அவர்களது வீடுகளுக்கே செல்ல வகை செய்வோம்.இப்படிப்பட்ட கொள்கைகளைக் கூறித்தான் மக்களிடம் ஓட்டு கேட்கப் போகிறேன்.கல்யாண மண்டபத்தை இடிக்கப் போவதாக மிரட்டுவது குறித்து நான் பயப்படப் போவதில்லை. அதை சட்டப்படி சந்திப்பேன்.பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் மிரட்டல்களுக்குப் பயப்பட்டால் ஒன்றும் நடக்காது என்றார் விஜயகாந்த்.

ஆரம்பிச்சுட்டாரு, விஜயகாந்த் ஆரம்பிச்சுட்டாரு தேசிய திராவிட முற்போக்கு கழகம் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் மக்களின் வீடு தேடிச் செல்லும் என்று அக் கட்சியின்தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.எம்.ஜ.ஆர். பிறந்த நாளையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு இன்று விஜயகாந்த் தனது கட்சிநிர்வாகிகளோடு சென்றார். (திடீர்னு எம்ஜிஆர் நினைவுக்கு வந்துட்டார்) அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு விஜயகாந்த் மாலைஅணிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கும், எனது கட்சிக்கும் மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பை இங்குகூறுவதை விட நீங்களே என்னுடன் நேரில் வந்து பார்த்தால் நிதர்சனமாக தெரிந்து கொள்ள முடியும்.எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களைத் தேடி மக்கள்அலைய வேண்டியிருக்காது. அவை மக்களைத் தேடி, அவர்களது வீடுகளுக்கே செல்ல வகை செய்வோம்.இப்படிப்பட்ட கொள்கைகளைக் கூறித்தான் மக்களிடம் ஓட்டு கேட்கப் போகிறேன்.கல்யாண மண்டபத்தை இடிக்கப் போவதாக மிரட்டுவது குறித்து நான் பயப்படப் போவதில்லை. அதை சட்டப்படி சந்திப்பேன்.பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் மிரட்டல்களுக்குப் பயப்பட்டால் ஒன்றும் நடக்காது என்றார் விஜயகாந்த்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேசிய திராவிட முற்போக்கு கழகம் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் மக்களின் வீடு தேடிச் செல்லும் என்று அக் கட்சியின்தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

எம்.ஜ.ஆர். பிறந்த நாளையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு இன்று விஜயகாந்த் தனது கட்சிநிர்வாகிகளோடு சென்றார். (திடீர்னு எம்ஜிஆர் நினைவுக்கு வந்துட்டார்) அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு விஜயகாந்த் மாலைஅணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கும், எனது கட்சிக்கும் மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பை இங்குகூறுவதை விட நீங்களே என்னுடன் நேரில் வந்து பார்த்தால் நிதர்சனமாக தெரிந்து கொள்ள முடியும்.

எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசிய அடிப்படைப் பொருட்களைத் தேடி மக்கள்அலைய வேண்டியிருக்காது. அவை மக்களைத் தேடி, அவர்களது வீடுகளுக்கே செல்ல வகை செய்வோம்.

இப்படிப்பட்ட கொள்கைகளைக் கூறித்தான் மக்களிடம் ஓட்டு கேட்கப் போகிறேன்.

கல்யாண மண்டபத்தை இடிக்கப் போவதாக மிரட்டுவது குறித்து நான் பயப்படப் போவதில்லை. அதை சட்டப்படி சந்திப்பேன்.பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் மிரட்டல்களுக்குப் பயப்பட்டால் ஒன்றும் நடக்காது என்றார் விஜயகாந்த்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil