விஜயகாந்த் பேரணிக்கு அனுமதி கிடைக்குமா? நடிகர் விஜயகாந்த் செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டை நடத்துகிறார். அன்றைய தினமே,தனது புதிய அரசியல் கட்சி குறித்தும் அறிவிப்பை வெளியிடுகிறார்.அன்றைய தினம் பேரணி நடத்தவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கு இதுவரை காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை. மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன. தலைநகர் சென்னை தொடங்கி கடைக் கோடிசெங்கோட்டை வரை மன்ற மாநாட்டுக்கான சுவர் விளம்பரங்களை எழுதும் பணியிலும், விஜயகாந்த்துக்கு கட் அவுட்வைக்கும் வேலையிலும் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.விஜயகாந்த் தற்போது பேரரசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்தும், ரசிகர்களுக்குகுஷியேற்படுத்தும் வகையிலான பஞ்ச் டயலாக்குகளையும் அள்ளி இறைத்துள்ளாராம். இதற்கடுத்து குறுகிய காலத் தயாரிப்பாகஒரு சொந்தப் படத்தை எடுக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, மாநாட்டுக்கு முன்பாக ரசிகர்களுடன் கலந்துரையாட நினைக்கிறார் விஜயகாந்த். இதற்காக மாவட்டஅளவிலான நிர்வாகிகளை சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்திற்கு வரவழைத்துஅவர்களுடன் பேசப் போகிறார்.ஜூலை 1ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு இந்த கலந்துரையாடல் இருக்குமாம். இதில் மாவட்ட அளவிலானஅனைத்து அணிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.கட்சிப் பெயரை விஜயகாந்த் ஏற்கனவே முடிவு செய்து விட்டாலும்கூட, இந்த ஆலோசனையின் போது நிர்வாகிகளிடம் கட்சிபெயர் குறித்த யோசனைகளை கேட்கவுள்ளாராம்.இதற்கிடையே, மன்ற மாநாட்டையொட்டி மதுரை நகரில் பிரமாண்ட பேரணி நடத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.இருப்பினும் முக்கியச் சாலைகளில் பேரணிகள் நடத்தத் தடை இருப்பதால் விஜயகாந்த் பேரணிக்கு இதுவரை காவல்துறைஅனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் அம்மாவை நேரில் அணுகி எப்படியும் கேப்டன் அனுமதி பெற்று விடுவார் என்று ரசிக கண்மணிகள்நம்பிக்கையுடன் உள்ளனர்.

By Staff

நடிகர் விஜயகாந்த் செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டை நடத்துகிறார். அன்றைய தினமே,தனது புதிய அரசியல் கட்சி குறித்தும் அறிவிப்பை வெளியிடுகிறார்.

அன்றைய தினம் பேரணி நடத்தவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கு இதுவரை காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை.

மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன. தலைநகர் சென்னை தொடங்கி கடைக் கோடிசெங்கோட்டை வரை மன்ற மாநாட்டுக்கான சுவர் விளம்பரங்களை எழுதும் பணியிலும், விஜயகாந்த்துக்கு கட் அவுட்வைக்கும் வேலையிலும் ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

விஜயகாந்த் தற்போது பேரரசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்தும், ரசிகர்களுக்குகுஷியேற்படுத்தும் வகையிலான பஞ்ச் டயலாக்குகளையும் அள்ளி இறைத்துள்ளாராம். இதற்கடுத்து குறுகிய காலத் தயாரிப்பாகஒரு சொந்தப் படத்தை எடுக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே, மாநாட்டுக்கு முன்பாக ரசிகர்களுடன் கலந்துரையாட நினைக்கிறார் விஜயகாந்த். இதற்காக மாவட்டஅளவிலான நிர்வாகிகளை சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்திற்கு வரவழைத்துஅவர்களுடன் பேசப் போகிறார்.

ஜூலை 1ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு இந்த கலந்துரையாடல் இருக்குமாம். இதில் மாவட்ட அளவிலானஅனைத்து அணிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

கட்சிப் பெயரை விஜயகாந்த் ஏற்கனவே முடிவு செய்து விட்டாலும்கூட, இந்த ஆலோசனையின் போது நிர்வாகிகளிடம் கட்சிபெயர் குறித்த யோசனைகளை கேட்கவுள்ளாராம்.

இதற்கிடையே, மன்ற மாநாட்டையொட்டி மதுரை நகரில் பிரமாண்ட பேரணி நடத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.இருப்பினும் முக்கியச் சாலைகளில் பேரணிகள் நடத்தத் தடை இருப்பதால் விஜயகாந்த் பேரணிக்கு இதுவரை காவல்துறைஅனுமதி கொடுக்கவில்லை.

இருப்பினும் அம்மாவை நேரில் அணுகி எப்படியும் கேப்டன் அனுமதி பெற்று விடுவார் என்று ரசிக கண்மணிகள்நம்பிக்கையுடன் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X