நடிகர், நடிகைகள் என் கட்சியில் சேர முன்வரவில்லை: விஜயகாந்த் எனது புதிய கட்சியில் சேருவதாக இதுவரை எந்த நடிகர், நடிகைகளும் கூறவில்லை. நானும் யாரிடமும் கேட்கவில்லை.யாராவது சேர முன்வந்தால் சேர்த்துக் கொள்வேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்பாசாமி கண்மருத்துவமனை மற்றும் டால்மியா ஹெல்த் கேர் பிரிவு ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தின. நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமை, விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்பரிசோதனை செய்து கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கட்சியில் சேருவதாக இதுவரை எந்த நடிகரும், நடிகையும்கூறவில்லை. நானும் யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை. யாராவது சேர முன் வந்தால் நிச்சயம் சேர்த்துக் கொள்வேன். கட்சி மாநாட்டுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. நான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த நாள் முதல்எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கி விட்டன. இன்னும் வந்து கொண்டு தான் உள்ளன. ஆனால் அதற்கெல்லாம் பயப்படமுடியுமா? அரசியலில் எனக்கு குரு என்று யாரும் கிடையாது. மக்களுக்கு நன்மை செய்தவர்கள் எல்லாம் என் குருக்கள் தான். மூப்பனார்போல நான் அரசியலில் இருப்பேன். அதாவது அரசியலில் அனைவருக்கும் பிடித்த தலைவராக இருப்பேன். காமராஜரும், எம்.ஜி.ஆரும் எல்லோருக்கும் பொதுவானவர்கள். அவர்களது படங்களை யார் வேண்டுமானாலும்பயன்படுத்தலாம். என் கட்சிக்கும் அவர்களது படங்களை பயன்படுத்துவேன். ஜாதி, மத வேறுபாடுகளை ஒழிப்பது தான் எனது கட்சியின் முதல் வேலையாக இருக்கும். அதில் தொய்வில்லாமல்செயல்படுவேன் என்றார் விஜயகாந்த்.
எனது புதிய கட்சியில் சேருவதாக இதுவரை எந்த நடிகர், நடிகைகளும் கூறவில்லை. நானும் யாரிடமும் கேட்கவில்லை.யாராவது சேர முன்வந்தால் சேர்த்துக் கொள்வேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்பாசாமி கண்மருத்துவமனை மற்றும் டால்மியா ஹெல்த் கேர் பிரிவு ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தின.
நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமை, விஜயகாந்த் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்பரிசோதனை செய்து கொண்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கட்சியில் சேருவதாக இதுவரை எந்த நடிகரும், நடிகையும்கூறவில்லை. நானும் யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை. யாராவது சேர முன் வந்தால் நிச்சயம் சேர்த்துக் கொள்வேன்.
கட்சி மாநாட்டுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. நான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த நாள் முதல்எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கி விட்டன. இன்னும் வந்து கொண்டு தான் உள்ளன. ஆனால் அதற்கெல்லாம் பயப்படமுடியுமா?
அரசியலில் எனக்கு குரு என்று யாரும் கிடையாது. மக்களுக்கு நன்மை செய்தவர்கள் எல்லாம் என் குருக்கள் தான். மூப்பனார்போல நான் அரசியலில் இருப்பேன். அதாவது அரசியலில் அனைவருக்கும் பிடித்த தலைவராக இருப்பேன்.
காமராஜரும், எம்.ஜி.ஆரும் எல்லோருக்கும் பொதுவானவர்கள். அவர்களது படங்களை யார் வேண்டுமானாலும்பயன்படுத்தலாம். என் கட்சிக்கும் அவர்களது படங்களை பயன்படுத்துவேன்.
ஜாதி, மத வேறுபாடுகளை ஒழிப்பது தான் எனது கட்சியின் முதல் வேலையாக இருக்கும். அதில் தொய்வில்லாமல்செயல்படுவேன் என்றார் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications