ஆசை ஆசையாய் இருக்கிறதே.. இதுபோல் வாழ்ந்திடவே.. அனிதா விஜயகுமாரின் பேமிலி போட்டோ!

சென்னை:தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார் நடிகர் விஜயகுமார். கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர், குணச்சித்திர வேடங்களில், சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவரின் மகள் அனிதா தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜயகுமார் மஞ்சுளா: நடிகர் விஜயகுமார் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில், 1976ம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர். இதில் ஒரே ஒரு ஆண் வாரிசு என்றால் அது நடிகர் அருண் விஜய் தான். அருண் விஜய்யும் அப்பாவை போல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

vijaykumar anitha arunvijay

பேத்தி தியாவின் திருமணம்: இதில் விஜயகுமார் மகள்களில் ஒருவரான அனிதா மருத்துவராக லண்டனில் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா, ஸ்ரீஜெய் என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் தியாவும் அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். இதில் தியாவுக்கு தில்லா என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி மாதம் திருமணம் தமிழ் திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, சினேகா, பிரசன்னா, பாக்கியராஜ், மீனா, கேஎஸ் ரவிக்குமார், ஜெயம் ரவி என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

பாசக்கார அக்கா: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார், அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அம்மா, அப்பா,மகள், மருமகன் என அனைவருடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் தம்பி அருண் விஜய் பாசமான அக்காவிற்கு ஊட்டி விடுகிறார். இந்த போட்டோவை பார்த்த பலர் சூப்பர் குடும்பம் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அனிதா இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக " எனது மகிழ்ச்சிக்கு எனது மிகப்பெரிய ஆதரவாகவும் காரணமாகவும் இருக்கும் அன்புக்குரியவர்களை எப்போதும் கொண்டிருப்பதில் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X