அருண் விஜய் அக்கா-க்கு திடீரென தாய் மாமனாக மாறிய கட்டப்பா... என்ன நடந்தது?

சென்னை : நடிகர் அருண் விஜய்யுடன் பிறந்தவர் டாக்டர் அனிதா விஜய்குமார்.

இவர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய திருமணத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் அனிதா.

விஜய்குமார் மகள் அனிதா

விஜய்குமார் மகள் அனிதா

நடிகர் விஜய்குமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு. கடந்த 1969ல் விஜய்குமார் இவரை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு பிறந்தவர்தான் அருண் விஜய். மேலும் இவருக்கு கூடப்பிறந்தவர்கள் அனிதா, கவிதா. இதில் அனிதா கோகுல கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்துக் கொண்டார்.

லண்டனில் செட்டில்

லண்டனில் செட்டில்

இவருக்கு கடந்த 1997ல் திருமணமான நிலையில் ஒரு மகன், மகள் மற்றும் கணவருடன் லண்டனில் செட்டில் ஆனார். இவரது மகள் மற்றும் மகன் தற்போது மிகவும் வளர்ந்துவிட்டனர். இவர்களின் புகைப்படங்களை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா பதிவிட்டுள்ளார்.

தாத்தா போலிருக்கும் பேரன்

தாத்தா போலிருக்கும் பேரன்

இதில் இவரது மகன் அசலாக தனது தாத்தா விஜய்குமாரை போலவே காணப்படுகிறார். இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் தன்னுடைய திருமணத்தின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து அனிதா விஜய்குமார் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

திருமணத்தில் சுவாரஸ்யம்

திருமணத்தில் சுவாரஸ்யம்

தன்னுடைய திருமணத்தின்போது தன்னுடைய மாமா இடையில் காணாமல் போனதாகவும், அப்போது தன்னுடைய திருமண சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை நடிகர் சத்யராஜ் ஏற்று நடத்தியதாகவும் அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் அவரது திருமண நிகழ்வு பரபரப்பாக சென்றுள்ளது.

திவ்யா சத்யராஜ் கமெண்ட்

திவ்யா சத்யராஜ் கமெண்ட்

அனிதாவின் இந்த பதிவிற்கு சத்யராஜின் மகள் திவ்யாவும் கமெண்ட் செய்துள்ளார். மிகவும் அழகான புகைப்படம் என்றும் தன்னுடைய அப்பாவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். உண்மையில் அந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக காணப்படுகிறார்.

ஒற்றுமையான சகோதரிகள்

ஒற்றுமையான சகோதரிகள்

நடிகர் அருண் விஜய், விஜய்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் என்றாலும் அனைத்து சகோதரிகளையும் தனது சொந்த சகோதரிகளாகவே பார்த்து வருகிறார். இவர்களில் தற்போது வனிதா விஜய்குமார் மட்டும் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. மற்ற அனைத்து சகோதரிகளும் சிறப்பான உறவை கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X