»   »  விஜயக்குமார் மனைவி நகை மோசடி

விஜயக்குமார் மனைவி நகை மோசடி

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயக்குமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணு ரூ. 7 லட்சம் பணத்தை மோசடிசெய்து விட்டதாக கூறி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

விஜயக்குமாரின் இரண்டாவது மனைவி தான் மஞ்சுளா. இவரது முதல் மனைவிமுத்துக்கண்ணு ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வருகிறார். இவரது மகன் தான் நடிகர்அருண்குமார்.

இவர் மீது சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த முத்து என்ற பெண் கொடுத்துள்ளபுகாரில்,

எனக்கு சொந்தமான ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நகையை முத்துக்கண்ணு மற்றும்தயாரிப்பாளர் வெங்கடராஜுவின் மனைவி நளானியிடம் விற்றேன். முதலில் ரூ. 3லட்சம் பணத்தை கொடுத்தனர். மீதம் உள்ள 7 லட்சத்தை படிப்படியாக தருவதாக கூறிநகையை வாங்கினர்.

ஆனால் சொன்னபடி அவர்கள் பணத்தைத் தரவில்லை. முத்துக்கண்ணு வீட்டிற்குச்சென்று கேட்டபோது, அங்கிருந்த அவரது மகன் நடிகர் அருண்குமார், நகை நளாயினிவீடடில் உள்ளது. அங்கு போய்க கேளுங்கள். எனது தாயார் அமெரிக்காவில்இருக்கிறார் என்று கூறி விட்டார்.

பணத்தைத் தராமல் அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். எனவே எனது பணத்தை பெறறுத்தர வேண்டும் என்று கோரியுள்ளார் முத்து.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil