காலையிலேயே கெத்தாக என்ட்ரி கொடுத்து வாக்களித்த விஜய்.. டிரெண்டாகும் VijayMakkalIyakkam

சென்னை: மற்ற சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்துவதற்கு முன்னதாக முதல் பிரபலமாக காலையிலேயே நடிகர் விஜய் காரில் வந்து இறங்கி வாக்கு செலுத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Recommended Video

#TNLocalBodyElection வாக்குச் சாவடியில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய்...? நடந்தது இதுதான்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் களத்தில் குதித்துள்ள நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காலையிலேயே தனது ஜனநாயக கடமையை நடிகர் விஜய் ஆற்றி உள்ளார்.

#VijayMakkalIyakkam என்கிற ஹாஷ்டேக்கை உருவாக்கிய விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்தியளவில் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முதல் பிரபலமாக

முதல் பிரபலமாக

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் முதல் பிரபலமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார். சிகப்பு நிற காரில் வந்து இறங்கிய விஜயை பார்த்ததும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதின.

வரிசையில் நிற்க வேண்டாம்

வரிசையில் நிற்க வேண்டாம்

பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பெருங்கூட்டம் கூடியதால், நடிகர் விஜய்யை வரிசையில் நிற்க வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக உள்ளே சென்று வாக்கு செலுத்திவிட்டு வெளியேறினார். அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

விஜய் மக்கள் இயக்கம் டிரெண்டிங்

விஜய் மக்கள் இயக்கம் டிரெண்டிங்

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் போட்டியிட்டு வருகின்றனர். நடிகர் விஜய் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஜய் ரசிகர்கள் #VijayMakkalIyakkam என்ற ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தலைவன் தரிசனம்

தலைவன் தரிசனம்

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கான அரபிக் குத்து பாடலுக்கு சர்வதேச அளவில் ஏகப்பட்ட ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் நடனமாடி வரும் நிலையில், நடிகர் விஜய்யை அவரது ரசிகர்களும் பொதுமக்களும் இன்று வாக்குச்சாவடியில் சந்திக்க நேரிட்ட நிலையில், தலைவன் தரிசனம் இது போதும் தெய்வமே என விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

ஜனநாயக கடமை

ஜனநாயக கடமை

"நம் ஆருயிர் தளபதி காலையிலேயே ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்." என விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பெரும் வெற்றியை சந்திக்கும் என விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X