விஜய்யின் அந்த ஆக்ஷன்.. கொண்டாட்டத்தில் தவெக.. இந்த ரசிகை சொல்றதை கேளுங்க
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விஜய் பேசியதுதான் இன்றைய ஹாட் டாபிக். வாயையே அவர் திறப்பதில்லை என்று எதிர்க்கட்சியினர் வைத்த விமர்சனத்துக்கெல்லாம் பதில் கொடுக்கும்படி இருந்தது அவரது பேச்சு. அந்தப் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த தவெகவினரும் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகை ஒருவரின் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
முதலமைச்சராக விஜய் பதவியேற்றதிலிருந்து முக்கியமான விஷயங்களுக்கு வாயே திறப்பது இல்லை என்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சியினரால் தொடர்ந்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியபோதுகூட திமுக உறுப்பினர்கள், 'வாயை திறங்க சி.எம்', 'மாஸ்டார் வாயில் பிளாஸ்டர்' போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திக்கொண்டும், பேட்ஜ் அணிந்துகொண்டும் பேரவைக்கு வந்திருந்தார்கள். நேற்றும் விஜய்யின் மௌனம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சகட்டுமேனிக்கு விளாசினார்.

விஜய் பேச்சு: சூழல் இப்படி இருக்க இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு அளித்த பதிலுரையில், "நான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நேராக வந்து முதலமைச்சராகவில்லை. மக்கள் மனதுக்குள் நுழைய என்ன பாடு பட்டோம் என்று எங்களுக்குத்தான் தெரியும். 1990 முதலே நான் மக்கள் பணியில் ஈடுபட்டுவருகிறேன்.2008ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம்.
படங்களிலும்: என்னுடைய படங்களிலும் ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், கல்வி உள்ளிட்டவைகள் குறித்து பேசியிருக்கிறேன். அரசியல் பேசியதால் என்னுடைய படங்கள் எத்தனை பிரச்னைகளை சந்தித்தன என்பதும், இப்போதுவரை சந்திக்கிறது என்பதும் அனைவருக்குமே தெரியும். நாங்கள் மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம்.
நான் பேசவே இல்லை என்று சொல்கிறார்கள். ஐந்து நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் என்ன நடந்தது என்று தெரியும். டாஸ்மாக் மூலம் பார்ட்டி ஃபண்ட் என்று சொல்லி கொள்ளையடித்த பணத்தை எல்லாம்; அரசு கஜானாவுக்கு கொண்டு வருகிறோம்" என பல விஷயங்களை பேசினார். அவரது பேச்சு முழுக்க முழுக்க திமுகவை கடுமையாக அட்டாக் செய்யும்படியே எழுதி கொடுக்கப்பட்டிருந்தது.
விஜய் செய்த ஆக்ஷன்: பார்ட்டி ஃபண்ட் என்று விஜய் சொல்லியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்துவிட்டார்கள். அவர்கள் போன பிறகு அவர்கள் இருந்த காலி இருக்கைகளை பார்த்து,'நீங்கள் எல்லாம் காலி' என்று ஆக்ஷன் செய்தார். தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி உடன்பாடு முடிந்துவிட்டது என்பதை இந்த ஆக்ஷன் மூலம் ஸ்டாலின் செய்துகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகையின் வீடியோ: இந்த ஆக்ஷன் மூலமும், பேச்சின் மூலமும் ஒட்டுமொத்த திமுகவையும் ஒற்றை ஆளாக கதறவிட்டுவிட்டார் என்று தவெகவினர் உற்சாகமடைந்திருக்கிறாரக்ள். இந்நிலையில் விஜய்யின் ரசிகை ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "வாயை திறங்க சி.எம் என்று சொன்னவர்களை சட்டப்பேரவையில் வைத்து அண்ணன் குஜிலிமஸ்து செய்திருக்கிறார். இன்றோ ப்ளீஸ் சி.எம் வாயை மட்டும் திறக்காதீங்க என்று எழுந்து ஓடுகிறார்கள். முன்பெல்லாம் கொளத்தூர் என்று சொன்னால் திமுகவினர் ட்ரிகர் ஆவார்கள். இனிமேல் பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னால் அதற்கும் ட்ரிகர் ஆவார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
