Jani Master: 21 வயது பெண் நடனக் கலைஞருக்கு பலமுறை பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் கைதாவாரா?

ஹைதராபாத்: தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற 'ஹலமதி ஹபிபோ'. வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்த பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷாவுக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் போல்டாக முன் வந்து குரல் கொடுத்த நிலையில், கேரள அரசு ஹேமா கமிட்டியை உருவாக்கியது. ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹேமா பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தை பெற்ற நிலையில், அதிரடியாக பல முன்னணி சினிமா பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

jani master sexual assault vijay

தெலுங்கிலும் அதே போல பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதாக நடிகை சமந்தா குரல் கொடுத்திருந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார்.

புட்ட பொம்மா முதல் ரஞ்சிதமே: டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் ஜானி மாஸ்டர் கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் அவர் உருவாக்கிய புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு அவரையே கொரியோகிராஃபராக ஒப்பந்தம் செய்தார் விஜய். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் ஜானி மாஸ்டர் வென்றார்.

jani master sexual assault vijay

பல முறை பாலியல் தொல்லை: ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். 21 வயதான அவர் துணிச்சலுடன் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் எல்லாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்கிற அதிர்ச்சி அளிக்கும் புகாரை கூறியுள்ள நிலையில், ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறை சென்ற அனுபவம்: ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகார் காரணமாக 6 மாதங்கள் ஜானி மாஸ்டர் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அடிக்கடி தெலுங்கு சினிமாவில் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டோலிவுட்டிலும் பல சினிமாவை சேர்ந்த பெண்கள் வெளிப்படையாக முன் வந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள் என்றும் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X