Actor Suriya: சூர்யாவுடன் ஜோடி சேரும் பீஸ்ட் நாயகி.. அந்தமானில் துவங்கும் சூர்யா 44 பட சூட்டிங்!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா.
இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அந்தமானில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது தொடர்ந்து அந்தமான் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் படங்கள் எதுவும் ரிலீசாகாத சூழலில் இந்த ஆண்டு கங்குவா படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ள சூழலில் படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ள சூழலில் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
கங்குவா படம்: படத்தில் சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்நிலையில், அடுத்ததாக சூர்யா தன்னுடைய சூர்யா 44 படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்துள்ளார். இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அந்தமானில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா 44 பட சூட்டிங் அப்டேட்: இந்நிலையில் இந்தப் படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாகவும் படக்குழு கூறியுள்ளது. மேலும் படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்து விஷயங்கள் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். காதலுடன் அதிரடி ஆக்சன் கலந்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இதையொட்டி முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் 2ம் தேதி துவங்க உள்ள சூழலில், படம் 2025ம் ஆண்டின் பொங்கல் ரிலீசாக அல்லது கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் எதுவும் ரிலீசாகாத சூழலில் இந்த ஆண்டில் சூர்யாவின் கங்குவா படம் வெளியாகவுள்ளது. இதனிடையே அடுத்தடுத்த கர்ணா, சூர்யா 44 படங்களில் சூர்யா தன்னை இணைத்துக் கொள்ளவுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











