போக்கிரி சீனை சட்டசபையில் ரீக்ரியேட் பண்ண விஜய்.. பிரசாந்த் ரங்கசாமி ட்வீட்டை பார்த்தீங்களா!
சென்னை: சோஃபா மாடல் ஆட்சி என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விமர்சிக்கும் போது பார்ட்டி ஃபண்ட் என முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்த உடனே ஏன் இப்படி தெறித்து ஓடுகின்றனர் திமுகவினர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.
போக்கிரி படத்துல விஜய் அந்த போலீஸ்காரரிடம் "கன்னு என்னது தான் பொண்ணு என்னதுதான்" என பேசுவதை போல அப்படியே முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபைல பேப்பர் எல்லாம் பார்க்காமல் பேசி எதிர்க்கட்சியினரை டோட்டல் வாஷ் அவுட் செய்துவிட்டார் என தவெகவினர் சந்தோஷத்தில் தாண்டவமாடுகின்றனர்.

விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி விஜய் அரசியலில் வெற்றிப் பெற்றால் மொட்டையடித்துக் கொள்கிறேன் என சபதம் செய்த நிலையில், சிஎம் ஆன உடனே மொட்டையடித்துக் கொண்டார். இந்நிலையில், விஜய்யை பேசுங்க என சொன்னவங்க எல்லாம் இப்படி பேசியதும் ஓடுறாங்களே என போட்டுள்ள ட்வீட் திமுகவினரை ட்ரிக்கர் செய்துள்ளது.
ரியல் ஜன நாயகன்: இனிமேல் ரசிகர்கள் ரீல் ஜன நாயகன் படம் வந்தால் என்ன வராமல் போனால் எங்களுக்கு என்ன? என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். சட்டமன்றத்தில் விஜய் பேசாமல் அமைதியாக இருக்கிறாரே என்றும் மெளனம் பேசியதே என்றெல்லாம் ட்ரோல் செய்தனர். சோஃபா மாடல் அரசு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இன்று பார்ட்டி ஃபண்ட் என்கிற ஒன்றையே காலி செய்துள்ளோம் என விஜய் பேசியதும் ஒட்டுமொத்த திமுகவினரும் எழுந்து முதலமைச்சரை பேச விடாமல் தடுத்தனர். அதன் பின்னர், வெளிநடப்பு செய்த நிலையில், ரியல் ஜன நாயகன் படமே ஓடுது என ரசிகர்கள் சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டாகி வருகிறது.
பிரசாந்த் ரங்கசாமி ட்வீட்கள்: "Party fund னு சொன்ன உடனே டென்ஷன் ஆயிட்டாங்க!" என்றும் "ஒரே ஒரு வார்த்தைல மொத்த பேரையும் ட்ரிக்கர் பண்ணி விட்டாப்ல !" என்றும் "இவரையாடா பேசமாட்டார்னு சொல்லிட்டு இருந்தீங்க? வச்சு பொளக்குறாப்ல!" என ஏகப்பட்ட ட்வீட்களை வரிசையாகப் போட்டு முதலமைச்சர் விஜய்க்கு ஃபயர் விட்டுள்ளார்.
நாடு முழுவதும் டிரெண்டிங்: முதலமைச்சர் போல விஜய் பேசவில்லை என்றும் எதிர்கட்சியினர் கிளம்பிச் சென்ற நிலையில், யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறார் விஜய் என திமுகவினர் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மு.க. ஸ்டாலினுக்கு எதிராக "உங்க அப்பாவா எங்கப்பா காணோம்" என்கிற குட்டி கதையை சொல்லி விட்டு அவரது ஸ்டைலில் ஃபினிஷ் என சைகை காட்டியது நாடு முழுவதும் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications