சூர்யா, ஜோதிகாவை துபாயில் சந்தித்த விஜய் நண்பர்.. அடேங்கப்பா அவரோட மகளா இது.. இப்படி வளர்ந்துட்டாரே!

சென்னை: நாளைய தீர்ப்பு படத்திலேயே விஜய்யின் நண்பராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீநாத். வேட்டைக்காரன், மாஸ்டர் என விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத் கல்லூரியில் இருந்தே விஜய்யின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து மறைந்தாலும் என்றும் ரசிகர்களின் மனங்களில் இருக்கும் இயக்குநர் ஜீவா உடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் ஸ்ரீநாத்.

Vijay s close friend Director Srinath meets Suriya and Jyothika at Dubai with his daughter
Photo Credit:

சமீபத்தில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா மற்றும் ஜோதிகாவை தனது மகளுடன் சந்தித்த புகைப்படத்தை சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஸ்ரீநாத்.

விஜய்யின் கல்லூரி நண்பர்: லயோலா கல்லூரியில் விஜய்யுடன் இணைந்து படித்தவர் தான் ஸ்ரீநாத். உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்னர் தான் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், குட்டி, உத்தமபுத்திரன், வேட்டைக்காரன், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Vijay s close friend Director Srinath meets Suriya and Jyothika at Dubai with his daughter
Photo Credit:

ஜன நாயகன் படத்திலும்: விஜய் ஹீரோவாக நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலேயே அவருடைய நண்பராக நடித்த ஸ்ரீநாத், விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் ஜன நாயகன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவிலும் ஸ்ரீநாத் பங்கேற்பார் என தெரிகிறது.

சூர்யா, ஜோதிகாவுடன் சந்திப்பு: இந்நிலையில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா மற்றும் ஜோதிகாவை சந்தித்து பேசிய ஸ்ரீநாத் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். விஜய் மகன், சூர்யா மகள் எல்லாம் வளர்ந்துவிட்ட நிலையில், அவர்களுடைய நண்பரான ஸ்ரீநாத்தின் மகளும் பெரியவளாக வளர்ந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள், ஸ்ரீநாத்துக்கும் அவரது மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டைரக்டர் ஸ்ரீநாத்: உதவி இயக்குநராக ஜீவாவிடம் பணியாற்றிய ஸ்ரீநாத் சில படங்களை இயக்கியும் உள்ளார். 2009ம் ஆண்டு ஜீவா எழுதிய கதையை முத்திரை என்கிற டைட்டிலில் படமாக இயக்கி இயக்குநராக அறிமுகமானார். டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர். அதன் பின்னர், 2014ம் ஆண்டு சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தையும் இவர் தான் இயக்கினார். இந்த ஆண்டு லெக் பீஸ் என்கிற படத்தையும் ஸ்ரீநாத் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X