தலைவா 2026 நம்மளோடதுதான்.. ரசிகர்கள் சொன்னதும்.. எழுந்து வந்து விஜய் செய்த செயல்.. செம போங்க!
சென்னை: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கேவிஎன் தயாரிப்பாளர், அனிருத், பூஜா ஹெக்டேவுடன் மேடையில் கோட் சூட் அணிந்துக் கொண்டு தளபதி விஜய் கெத்தாக அமர்ந்திருந்தார். ரசிகர்கள் கத்தி "தலைவா 2026 நம்மளோடதுதான்" என சொன்னதும் விஜய் செய்த செயல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக மாறிய விஜய் ஜன நாயகன் படத்துடன் தனது சினிமா வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டு விட்டு தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் களத்தில் முழு வீச்சுடன் செயல்பட உள்ளார்.

அடுத்த ஆண்டு திமுகவுடன் நேரடி மோதலில் தேர்தலில் ஈடுபட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக போகிறேன் என விஜய் உறுதியாக சொல்லி வரும் நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிலும் ரசிகர்கள் அதையே கூறிவருகின்றனர்.
ஜன நாயகன் ஆடியோ லான்ச்: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு இசை வெளியீட்டு விழாவாக ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மாறியுள்ளது. மலேசியாவில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்களுடன் நடைபெற்று வரும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் "ஒரு பேரே வரலாறு" பாடல் பிஜிஎம்முடன் விஜய் நடந்து வந்த காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கின.
2026 நம்மளோடதுதான்: மேடையில் ஜன நாயகன் படக்குழுவுடன் விஜய் அமர்ந்திருந்த நிலையில், அருகே இருந்த ரசிகர் ஒருவர் "தலைவா 2026 நம்மளோடதுதான்" என்று கத்தி கூச்சலிட்டார். அதை கவனித்த விஜய் கைகளை வெற்றிக் குறியுடன் அசைத்தார். அதன் பின்னர், அந்த ரசிகர் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்க, தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து அந்த ரசிகருக்கும் அவர் அருகே இருந்த ரசிகர்களுக்கு கை கொடுத்துவிட்டுச் சென்ற காட்சிகளை சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் மிகுந்த உற்சாகத்துடன் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











