Bayilvan Ranganathan - லியோ பட லிப் லாக்.. விஜய் குடும்பம் படமே பார்க்கவில்லை..பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லியோ படத்தில் வரும் லிப் லாக் காரணமாக விஜய்யின் குடும்பம் படம் பார்க்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் அந்தப் படத்தை தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.

Vijays family did not watch the film Leo Says Bayilvan Ranganathan

வசூல் மழை: படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாயை வசூலித்த படம் முதல் வாரத்தின் முடிவில் 460 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும் லியோ படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

விஜய் - த்ரிஷா: பல வருடங்களுக்கு பிறகு விஜய் - த்ரிஷா இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்திருந்தனர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் கூறினர். குறிப்பாக படத்தில் விஜய்க்கு த்ரிஷாவுக்கும் இருந்த லிப் லாக் சீனில் ஒட்டுமொத்த திரையரங்கமே ஆர்ப்பரித்தது. இந்த சூழலில் அந்த லிப் லாக் சீனால் விஜய் குடும்பத்தில் பூகம்பம் வெடித்திருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், "த்ரிஷாவுடன் மீண்டும் நடிக்கக்கூடாது என சங்கீதா கட்டளையிட்டதாகவும் அதையும் மீறித்தான் விஜய் இதில் நடித்தார் என்ற செய்தி வருகிறது. அதை யாரும் மறுக்கவும் இல்லை. அதேபோல் விஜய் தன்னுடைய கட்டளையை மீறி நடித்ததாலும் குறிப்பாக லிப் லாக் காட்சியில் நடித்ததாலும் சங்கீதா ரொம்பவே வருத்தப்பட்டார் என்றும் சொல்கிறார்கள். த்ரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் முத்தக் காட்சியில் நடித்திருந்தார்.

லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கு த்ரிஷா தயாராகத்தான் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் லியோ படத்தில் த்ரிஷா நடிப்பதற்கான வாய்ப்பே அந்த லிப் லாக் காட்சிதான். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இங்குதான் இருக்கிறார். அவரே சென்று படத்தை பார்க்கவில்லையே. மகன் மட்டுமில்லை மகளும் பார்க்கவில்லை. சங்கீதா, மகன், மகள் பார்க்காதது இந்த விஷயத்தில் நிறைய கிசுகிசுக்களுக்கு இடம் கொடுக்கின்றன" என்றார்.

மேலும் பேசிய அவர், "விஜய் இப்போது அரசியலுக்கு வரமாட்டார். ஏனெனில் இந்தப் படம் சரியாக போகவில்லை. லியோ படம் முடிந்த பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பே விஜய் படத்தை பார்த்துவிட்டார். பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜிடம், இடைவேளைவரை நன்றாக இருக்கிறது. அதற்கு பின்பு சில காட்சிகளை மாற்றுமாறு விஜய் கூறினார். ஆனால் லோகேஷ் பிடிவாதமாக மறுத்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X