என்னை நம்பவில்லை..விஜய்யை எதிர்க்க துணிந்த தந்தை..எஸ்.ஏ.சி தனி கட்சி தொடங்குகிறார்.. புது பஞ்சாயத்து

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார். கட்சியின் முதல் மாநாட்டிலிருந்து கடைசியாக நடந்த பொதுக்குழுவரை தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை காத்திரமாக எதிர்த்துவருகிறார். அவருக்கு திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியாக அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவரது கரியர் இப்போது பீக்கில் இருக்கிறது. ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரது படங்கள் ரிலீஸுக்கு முன்னதாகவே நூறு கோடி ரூபாய் அளவில் கல்லா கட்டிவிடுவதால் தனிகாட்டு ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்தார் அவர். இப்படிப்பட்ட சூழலில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். ஒருபக்கம் அவர் தனது மார்க்கெட்டை தூக்கி எறிந்துவிட்டு வருகிறார் என்று பாராட்டுகிறார்கள்.

மறுபக்கம் விமர்சனம்: அதேசமயம் இன்னொரு தரப்பினரோ விஜய் கடைசியாக நடித்த கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே படுதோல்வியடைந்துவிட்டன. சொல்லப்போனால் அவரது மார்க்கெட் சரிய தொடங்கிவிட்டது. இதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் விஜய்யோ எப்படியாவது தமிழ்நாடு அரசியல் களத்தில் தானொரு சக்தியாக உருவெடுத்திட வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார்.

Vijay s father S A Chandrasekhar starts his own Political party against him

ஜன நாயகன் கடைசி படம்: அதன் காரணமாக அவர் நடிக்கும் கடைசி படம் ஜன நாயகன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் 2026ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட்டாகி வசூலில் மெகா சாதனை படைக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 121 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தந்தையுடன் சண்டையா, சமாதானமா?: இதற்கிடையே நடிகர் விஜய் வளர்ச்சியில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பு அவ்வளவு இருக்கிறது. ஆனால் ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது. அதற்கு காரனம் இப்போது தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் என்று பலர் சொல்வதுண்டு. சூழல் இப்படி இருக்க அவருக்கும் விஜய்க்கும் இடையே இருந்த மனஸ்தாபம் காணாமல் போனது. விஜய் அடிக்கடி தனது தாயையும் தந்தையையும் அடிக்கடி நேரில் சென்று சந்திப்பதும் நிகழ்ந்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகின. மேலும் தவெகவின் முதல் மாநில மாநாட்டுக்குக்கூட சந்திரசேகர் வந்திருந்தார். இந்நிலையில் எஸ்.ஏ.சி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

எஸ்.ஏ.சி பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "விஜய்யின் பெயரை வைத்து புஸ்ஸி ஆனந்த் சம்பாதிக்கிறார் என்று எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதனையடுத்து விஜய்யை நான் எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை என்னைவிட அவர் புஸ்ஸி ஆனந்த்தைதான் அதிகம் நம்புகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்களின் ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. நான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்" என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னது விஜய் தந்தை தனிக்கட்சியா மீண்டும் மகனுக்கும் தந்தைக்கும் சண்டை வந்துவிட்டதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X