ஜன நாயகன் விஜய் வருகிறார்.. தளபதி 69 படத்தின் பெயர் பட்டாசா இருக்கே.. அதிரும் கோலிவுட்

சென்னை: விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனையடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் விஜய்க்கு எப்போதும் டாப் 2க்குள் இடம் உண்டு. தனது ஒவ்வொரு அசைவிலும் ரசிகர்களை கட்டிப்போடும் வல்லமை படைத்தவர் அவர். சினிமாவில் விஜய் அறிமுகமானபோது அவரை கிண்டல் செய்யாதவர்களே இல்லை. தற்போது அவரை போற்றாதவர்களே இல்லை. அந்த அளவுக்கு தனது திறமையை வளர்த்து தனக்கான தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

vijay h vinoth jana nayagan

GOAT: அவரது நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அஜித்துக்கு எப்படி வெங்கட் மங்காத்தா என்ற மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் கொடுப்பார் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை. அதேசமயம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் மெர்சல் செய்தது. மேலும் வசூல் ரீதியாகவும் அப்படம் கெத்து காண்பித்தது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி களமிறங்குகிறது. அதற்கான கள பணிகளை அவர் இப்போதே தொடங்கிவிட்டார். சமீபத்தில் பரந்தூர் சென்று பரபரப்பை பற்ற வைத்த விஜய்; அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார்.

வினோத்துடன் கூட்டணி: அந்தவகையில் தற்கால இயக்குநர்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.மேலும் மமிதா பைஜூ உள்ளிட்டோரும் முக்கியமான ரோலில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.

படத்தின் பெயர்: இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 69 படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் படு மாஸாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறார். படத்தின் பெயரையும் போஸ்டரையும் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் தரமான சம்பவத்தை செய்யப்போகிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய்யின் அரசியல் பயணத்துக்கும் வலு சேர்க்கும் விதமாக படத்தின் பெயர் அமைந்திருப்பதாகவும் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X