Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி படம். தரணி இயக்கத்தில் கமர்சியல் படங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் சிறப்பாக சேர்க்கப்பட்டிருந்தன. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அந்த காலகட்டத்திலேயே தமிழில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டிய முதல் படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு கிடைத்தது.
இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இந்த படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி படம் சர்வதேச அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்களை அதிலும் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கடந்த 5 நாட்களில் 17 கோடி ரூபாய் வசூலை படம் பெற்றுள்ளது. படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் திரையரங்குகளில் சென்று பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்: நடிகர் விஜய் என்றாலே மாஸ் தான்/ தற்போது அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் பின்னி பெடலெடுத்து வருகின்றன. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் அடுத்ததாக தளபதி 69 படங்களை முடித்துவிட்டு அத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார். அவரது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் மாஸ்கோவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றுள்ளது.
கில்லி படம் ரீ-ரிலீஸ்: இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். இதனிடையே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கடந்த 20ம் தேதி விஜய்யின் கில்லி படம் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது பழைய ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக விஜயின் மாஸ் ஹிட் படமான கில்லி படமும் சர்வதேச அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. விஜய்க்கு கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தை கொடுத்த படம் கில்லி. இந்த படம் 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படம் என்ற பெருமையை பட குழுவினருக்கு பெற்று தந்தது.
பாடலாசிரியர் பா விஜய் உற்சாகம்: இந்நிலையில் இந்தப்படம் தற்போது கடந்த ஐந்து நாட்களிலேயே 17 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்த பாடல்கள் அனைத்துமே எவர்கிரீன் பேவரிட்டாக ரசிகர்களுக்கு அமைந்துள்ளன. அந்த வகையில் இந்த படத்தின் அப்படி போடு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனிடையே படத்தில் திரிஷாவிற்கு அறிமுக பாடலாக ஷல்லல்லா பாடல் அமைந்தது. இந்தப் பாடல் தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தில் பாடலாசிரியர் பா விஜய் மிகப்பெரிய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரேயொரு அப்படி போடு பாடல்: இந்தப் படத்தின் ஷல்லல்லா, அப்படி போடு மற்றும் க்ளைமாக்சில் வரும் காதலா என மூன்று பாடல்களை எழுதியுள்ளார் பா விஜய். கில்லி தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்று அவர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பொதுவாக ஹீரோயினுக்காக எழுதப்படும் பாடல்கள் ஹிட் ஆகாது என்பதால், இந்தப் பாடலை மிகவும் பயத்துடனேயே எழுதியதாகவும் ஆனால் தற்போது அந்தப் பாடல் கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல அப்படி போடு பாடல் குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஒரேயொரு சூரியன் இருப்பதுபோல தான், ஒரேயொரு அப்படி போடு பாடல் தான் என்றும் அவர் கூறியுள்ளார். தான் எழுதிய கமர்ஷியல் பாடல்களில் இதுதான் பெஸ்ட் என்றும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











