ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
சென்னை: தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் மீண்டும் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவில் கில்லி ரீ ரிலீஸ் மிகப்பெரிய சாதனையை படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸ் இல் நேற்று வெளியான கில்லி படத்துக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் அலப்பறை கிளப்பிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷி படுத்தி உள்ளது.
மெகா பிளாக் பஸ்டர் கில்லி: தெலுங்கில் மகேஷ்பாபு, பூமிகா நடித்து வெளியான கில்லி திரைப்படம் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய்க்கு முதல் முறையாக 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி தந்த படமாக கில்லி மாறியது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸ்னா என்னன்னு பார்ப்பீங்க?: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இதுவரை தியேட்டர்களில் வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை பெறாத நிலையில், ரீ ரிலீஸ் படங்கள் தியேட்டர் ஓனர்கள் சற்றே சந்தோசப்படுத்தி வந்தன. இந்நிலையில், ரீ ரிலீஸ்னா என்னன்னு இன்னைக்கு பார்ப்பீங்க என விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஓவர்சீஸில் அலப்பறை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. லியோ படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ஓவர்சிஸ் ரசிகர்கள் முதல் உள்ளூர் ரசிகர்கள் வரை ஆன்லைனில் தவமாய் தவம் கிடந்தனர். இந்நிலையில் வெளிநாடுகளில் நேற்று வெளியான கில்லி திரைப்படத்தை அங்குள்ள தளபதி ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்த்து உற்சாகமாக ஒவ்வொரு பாடலுக்கும் நடனமாடி அலப்பறையை கிளப்பிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
தமிழ்நாட்டில் எப்படி இருக்கும்?: ஓவர்சிஸ் ரசிகர்களே கில்லி படத்தின் ரீ ரிலீஸை இப்படி கொண்டாடி உள்ள நிலையில் தமிழ்நாட்டோட ரசிகர்கள் அதைவிட சிறப்பான சம்பவத்தை செய்யப் போகின்றனர் என தளபதி ரசிகர்கள் கில்லி படத்தை பார்க்க கிளம்பிவிட்டனர். 600 ஸ்க்ரீன்களில் கில்லி படம் வெளியாகவுள்ள நிலையில், எந்தளவுக்கு வசூல் வரும் என்பது நாளை தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











